சதம் தவறினாலும் தவான் அதிரடி!
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா 28 ரன்களில் வெளியேறினார். அவரையடுத்து களமிறங்கிய விராட் கோலி ரோகித் சர்மாவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் அணியின் ஸ்கோர் படிப்படியாக உயர்ந்தது.
கோலி தனது அரை சதத்தை கடந்த நிலையில், 60 பந்துகளுக்கு 56 ரன்கள் சேர்த்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, அதிரடி காட்டி வந்த ஷிகர் தவான் 106 பந்துகளுக்கு 98 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், மோர்கனிடம் கேட்ச் கொடுத்து தனது சத வாய்ப்பை இழந்துள்ளார்.