கோப்பையை வென்று இந்தியா அபாரம்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி-20 போட்டியில் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரை 3-2 எனக் கோப்பையை கைப்பற்றியது இந்தியா.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் தொடர் 2-2 என, சமநிலையில் இருந்தது. பைனல் போன்ற ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ரோகித் சர்மா (64) நல்ல துவக்கம் தந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், 17 பந்தில் 32 ரன் எடுத்து கைகொடுத்தார். அபாரமாக ஆடிய கேப்டன் கோஹ்லி, தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார். இவருக்கு ஹர்திக் பாண்ட்யா ஒத்துழைப்பு தந்தார்.

இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 224 ரன்கள் குவித்தது. கோஹ்லி (80), ஹர்திக் பாண்ட்யா (39) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

latest tamil news

கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (0) ஏமாற்றினார். பட்லர் (52), டேவிட் மலான் (68) கைகொடுத்தனர். பேர்ஸ்டோவ் (7), கேப்டன் மார்கன் (1), ஸ்டோக்ஸ் (14) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சாம் கர்ரான் (14) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் ஷர்துல் தாகூர் 3, புவனேஷ்வர் குமார் 2 விக்கெட் கைப்பற்றினர்.இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *