மூணு மேட்ச் சரியாக ஆடாத இந்திய வீரர்,ஆதரவு அளிக்கும் பேட்டிங் கோச்

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 1 ரன் மட்டுமே எடுத்தார்.

இதனையடுத்து அவரது இந்த மோசமான பேட்டிங் விமர்சனத்திற்குள்ளானது.இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் கோச் ராத்தோர் கே.எல்.ராகுலுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.ராகுல் ஒரு சிறந்த வீரர் என்றும் கடந்த ஆண்டு இந்தியாவிற்காக மிகச் சிறப்பாக ஆடியுள்ளார்,மூன்று ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை என்பதால் அவர் பேட்டிங்கை விமர்சிப்பது சரியல்ல என்றும் பேசினார்.மேலும், ஒரு போட்டியில் அவர் சரியாக நிலைத்து ஆடிவிட்டால் இந்த விமர்சனங்கள் தகர்ந்து விடும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *