நேராக வந்த கேட்ச்.. இங்கிலாந்து வீரரால் கடுப்பான சுந்தர்.. மைதானத்திலேயே நடந்த வாக்குவாதம்.. வைரல் வீடியோ..
நேற்றைய T20 போட்டியின் போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ்-க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் T20 போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து இங்கிலாந்து அணி 15.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 130 ரன் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ்-க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இன்னிங்ஸின் போது 14-வது ஓவரை வாசிங்டன் சுந்தர் வீசினார். அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் பந்தை நேராக பவுலரிடம் அடித்தார். அவர் அடித்த பந்து மிகவும் எளிமையாக சுந்தரிடம் கேட்சுக்கு வந்தபோது எதிர்முனையில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவின் ஹெல்மெட்டில் எதிர்பாராதவிதமாக பந்து பட்டுச் சென்றது. இதனால் சுந்தரால் அந்த கேட்சை பிடிக்க முடியவில்லை.
இதனால் கடுப்பான சுந்தர், ஜானி பேர்ஸ்டோவை நோக்கி கோபமாக பேச, பின்னர் இருவருக்கும் மைதானிலையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. உடனே வேகமாக வந்த நடுவர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினார். இந்த காட்சி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.