“அறைக்குள் சென்று அழுதேன்” – அணியில் இடம் பிடிக்காதது குறித்து பிரித்வி ஷா உருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க வீரர் பிருத்வி ஷா மோசமான பார்ம் காரணமாக அடிலெய்ட் டெஸ்டுக்கு பிறகு அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் அந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பிருத்வி ஷா.
அன்று நான் டென்ஷனாக இருந்தேன். எதற்குமே உபயோகமற்றவனாக உணர்ந்தேன். நான் என் அறைக்குச் சென்று மனம் உடைந்து அழுதேன். ஏதோ தப்பாக நடப்பது போல தெரிந்தது. அந்த தவறுக்கான பதிலை உடனடியாக நான் தேடியாக வேண்டும்’ என ஆஸ்திரேலிய தொடரில் அணியில் இடம் பெற முடியாத வேதனையை பகிர்ந்துள்ளார் பிருத்வி ஷா.
அடிலெய்ட் டெஸ்டில் ஷா முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்களையும் எடுத்திருந்தார். தற்போது விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் அசத்தலாக ஆடி வருகிறார் ஷா. இந்த தொடரில் 7 போட்டிகளில் 754 ரன்கள் விளாசியுள்ளார் பிருத்வி ஷா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Drupathi

“உலகமே இந்தியாவை எதிர்நோக்கியுள்ளது” – குடியரசுத் தலைவர் உரை!

குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்றத்தில்…

துரோகம் என்பது அவர்களது மரபணுவில் உள்ளது எடப்பாடி அணியை வச்சு செய்த பி.வி.கே.பிரபு

துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் துரோகம் என்பது அவர்களது மரபணுவிலே…

போக்குவரத்து பெண் தலைமை காவலரை கன்னத்தில் அறைந்த அதிமுக வழக்கறிஞர் அராஜகம்…!

சிவகாசியில் போக்குவரத்து பெண் தலைமை காவலரை கன்னத்தில் அறைந்த அதிமுக வழக்கறிஞர் கைது!சிவகாசி…

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளே இல்லை… தேவையும் இல்லை… சுப. வீரபாண்டியன் நறுக்

தமிழ்நாட்டில் மக்களை மதத்தால் பிரிக்கும் சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மீஞ்சூரில் திருவள்ளுவர் சிலை…