2048 ஒலிம்பிக்கை டெல்லியில் நடத்துவதே எங்கள் கனவு – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2048-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை டெல்லியில் நடத்துவதே எங்கள் கனவு என கூறியுள்ளார்.இது குறித்து ஏற்கனவே டெல்லி பட்ஜெட் தாக்கல் செய்யும்போதே பேசியிருந்தார்.தற்போது அதனை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.இது குறித்து இந்திய ஒலிம்பிக் குழு, டெல்லியின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது ஆனால் இதனை முதலில் இந்திய ஒலிம்பிக் குழுவிடம் ஆலோசித்திருக்க வேண்டும் என்றது.மேலும் ஒலிம்பிக் தனி ஒரு நகரத்தால் நடத்தப்படுவது எளிதான காரியம் இல்லை என இந்திய ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *