ரிஷப் பண்ட் – வாஷிங்டன் சதக்கூட்டணி!

அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் நாயகர்கள் என்று அறிவிக்க வேண்டுமென்றால் அது ஒன்று ரிஷப் பந்த், இன்னொன்று வாஷிங்டன் சுந்தர் என்றால் மிகையாகாது.

நேற்றைய ஆட்டத்தில் 146 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து இங்கிலாந்தின் 205 ரன்களை எதிர்த்து, இந்தியா கடுமையாகத் திணறிய போது ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் இணைந்து சதக்கூட்டணி அமைத்தனர். பந்த் முதல் 82 பந்துகளில் அரைசதம் கண்டு அடுத்த 33 பந்துகளில் சதம் விளாசினார். மிகப்பெரிய சதம் என்று நிபுணர்களால் பாராட்டப்படும் இன்னிங்ஸ் ஆயிற்று அது.

அதே போல் வாஷிங்டன் சுந்தர் நேற்று 60 நாட் அவுட்டிலிருந்து இன்றும் தனது அபாரமான ட்ரைவ், மேலேறி வந்து தூக்கி அடித்தல் போன்ற ஷாட்களால் மேலும் 36 ரன்களைச் சேர்த்து 96 ரன்களுக்கு வந்தார். அக்சர் படேலும் இவரும் மேலும் ஒரு சதக்கூட்டணி அமைத்தனர். அக்சர் 43 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆக, 5 பந்துகளில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மளமளவென்று இழந்து 365 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆனால், வாஷிங்டன் சுந்தர், 96 ரன்களில் ஆட்டமிழந்து தனது சத வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார். இது குறித்து, இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ”சதமடித்தால் ‘TON’ என்று பதிவிட காத்திருந்தேன். ஆனாலும் பரவாயில்லை சீக்கிரம் அடுத்த முறாஇ ‘TON’ என்று பதிவிட காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *