விரக்தியில் ஆத்திரமடைந்த ரஷ்ய வீரர்!

நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் ABN அம்ரோ டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ், செர்பிய வீரர் துசான் லஜோவிக்கை எதிர்கொண்டார். போட்டியின் முதல் சுற்றை மெத்வதேவ் 7-6 என்ற புள்ளிக் கணக்கில் தவறவிட்டார்.

இரண்டாவது சுற்றில் 4-4 என்ற புள்ளிக்கணக்கில் இருந்த போது அவர் அடித்த பந்து வலையில் பட்டதால் புள்ளியை தவறவிட்டார். இதனையடுத்து 6-4 என அந்த செட்டை தவறவிட்டார்.

இதனால், ஆத்திரத்தில் தனது டென்னிஸ் மட்டையை தரையில் அடித்து உடைத்தார். மேலும், நடுவரை நோக்கி ஆக்ரோஷமாக கத்தினார். இந்தபோட்டியில் மெத்வதேவ் 7-6, 6-4 என்ற செட்கணக்கில் தோல்வியைத் தழுவினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *