தனஞ்செயனை பொளந்த பொலார்டு!

ஆன்டிகுவாவில் நடந்த இலங்கை அணிக்குஎதிரான முதலாவது டி20 ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்தது 132 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 13.1ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என மேற்கு இந்தியத் தீவுகள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் இரு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக  இலங்கை லெக் ஸ்பின்னர் தனஞ்செயா ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 15-வது வீரர் மற்றும்  4-வது இலங்கை வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

இரண்டாவதாக அதே தனஞ்செயாவின் பந்துவீச்சில்தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் கெய்ரன் பொலார்ட் ஒரேஓவரில் 6 சிக்ஸர்களை விளாசினார். இதுவரை டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள்அடித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் யுவுராஜ் சிங், கிப்ஸ் மட்டுமே இருந்தனர் அவர்களோடு 14 ஆண்டுகளுக்குப்பின் பொலார்ட் இணைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…