சிராஜை திட்டிய பென்ஸ்டோக்ஸ்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோஹ்லி!

நான்காம் டெஸ்ட்டின் முதல் நாளில் இந்திய பந்துவீச்சாளர் சிராஜை தகாத வார்த்தைகளில் திட்டியதை தொடர்ந்து விராட்கோஹ்லி மற்றும் பென் ஸ்டோக்ஸுக்கு இடையே காரசாரமான விவாதம் நடந்தது.

நான்காவது டெஸ்ட் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்கப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அக்‌ஷர் படேல் 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 15, ரோஹித் சர்மா 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

இன்றைய ஆட்டத்தின் 13-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார், பென் ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். சிராஜ் பவுன்ஸராக வீசியபோது, அதைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஸ்டோக்ஸ், முகமது சிராஜை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

இதையடுத்து, முகமது சிராஜ் நேரடியாக கேப்டன் கோலியிடம் சென்று ஸ்டோக்ஸ் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட கேப்டன் கோலி நேரடியாக, ஸ்டோக்ஸிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரு வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் சூடானதையடுத்து, நடுவர் நிதின் மேனன் தலையிட்டு இருவரையும் பிரித்துவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…