இந்தியா-இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் – இங்கிலாந்து திணறல்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியுள்ளது.
போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறும். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது ரோகித் சர்மா, புஜாரா களத்தில் உள்ளனர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களை எடுத்துள்ளது.