ஐபிஎல் தொடர் ஆட்டத்தை விட பணத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது – பிரபல கிரிக்கெட் வீரர் கருத்து!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆட்டத்தை விட பணத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றது என்று டேல் ஸ்டெய்ன் கருத்து தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரும், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரிலும் விளையாடி வருபவர் டேல் ஸ்டெய்ன். இவர் நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை பணத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றது. அங்கு எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்?, ஏலம் எவ்வளவு பணம் எடுக்கலாம்? என்பதுதான் பரவலாகப் பேசப்படுகின்றது.

இதனால் ஐபில் கிரிக்கெட் தொடரை ஆடினால் எனக்கு கிரிக்கெட் மறந்துவிடும். ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் ஆகியவை கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. எனவேதான் நான் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளேன் என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். அண்மையில் ஐபிஎல் போட்டி தொடங்க உள்ள நிலையில் அதன் மீதான டேல் ஸ்டெயினின் விமர்சனம் சர்ச்சையானது. அதனை தொடர்ந்து தற்போது அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…