இந்தியா தோற்க வாய்ப்பில்ல ராஜா!

தொடரில் 2-1 என்று பின் தங்கிய நிலையில் இங்கிலாந்தில் லார்ட்சில் நடைபெறும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற வாய்ப்பில்லை, ஆனால் இந்தியா தகுதி பெறாமல் செய்ய முடியும். அதற்கு இங்கிலாந்து வெற்றி பெறவேண்டும்.

அப்படி வெற்றி பெற்றால் அது ஒரு பெரிய சாதனைதான் என்கிறார் ஜோ ரூட்.

இது குறித்து, “இந்தியாவின் சமீபத்திய உள்நாட்டுச் சாதனைகளை எண்ணிப்பாருங்கள். அப்படியிருக்கையில் 4வது டெஸ்ட் போட்டியை வென்று தொடரை 2-2 என்று சமன் செய்தால், அது உண்மையில் மிகப்பெரிய சாதனையே. அதுவும் கடைசி 2 தோல்விகளுக்குப் பிறகு.

இந்த வீரர்களின் நினைவுச்சிற்ப சாதனையாக இருக்கும் அது. அதற்கு நிறைய ஆடவேண்டியுள்ளது.

கடந்த டெஸ்ட் போல் பிட்ச் இருந்தால் ஆஃப் ஸ்பின்னர் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு காத்திருக்கிறார். அவர் திறமையுள்ள இளம் வீரர். சாதிக்கத் துடிப்பவர் நிச்சயம் தன் அடையாளத்தை இங்கு ஏற்படுத்த ஆர்வமாகவே இருப்பார்.

நாங்கள் கடந்த போட்டியில் அணித்தேர்வில் தவறுகளை இழைத்தோம். கடந்த போட்டியில் பிட்சை தவறாகக் கணித்தோம். இந்தியாவில் நடந்த கடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியை வைத்து பிட்சை தவறாக எடைபோட்டு விட்டோம். இவ்வளவு ஸ்பின் எடுக்கும் என்று தெரியவில்லை.

எனவே கடந்த டெஸ்ட் போன்ற பிட்ச் என்றால் டாம் பெஸ் உண்மையில் பெரிய சொத்துதான். நிச்சயம் ஸ்பின் எடுக்கும் என்றுதான் கருதுகிறேன். எனவே பயிற்சியில் ஸ்பின் தான் முக்கியக் கவனம் பெறுகிறது.

2019 தொடரை ட்ரா செய்தோம். அதே போல் இங்கும் டிரா செய்ய முடிந்தால் நிச்சயம் அது ஒரு பெரிய முயற்சியாகவே இருக்கும். அனுபவமற்ற இந்த அணி ட்ரா செய்தால் அது சாதனைதான். மேலும் என்னுடைய கேப்டன்சி வாழ்க்கையில் இந்த வெற்றியுடன் கூடிய டெஸ்ட் தொடர் ட்ராவும் ஒரு சாதனையாக அமையும்.

அயல்நாட்டில் கடினமான சூழ்நிலைகளில் வெற்றி பெறுவது பெருமகிழ்ச்சி. அனைவரும் சேர்ந்து இந்த வெற்றியையும் தொடர் ட்ராவையும் சாதிக்க முடிந்தால் உண்மையில் இந்த அணி என் பெருமைக்குரிய அணிதான்.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…