ஏன் இப்படி அழுகுறாங்க? நாதன் லயான் நக்கல்!

”பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக பிட்ச் மாறியதும் ஏன்  அவர்கள் அழுகிறார்கள் எனத் தெரியவில்லை” என்று ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் நாதன் லயான் மறைமுகமாக கிண்டலடித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே அகமதாபாத்தில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் போட்டி இரண்டே நாள்களில் முடிவடைந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது. ஆனால் அகமதாபாத் பிட்ச் மிக மோசமாக தயாரிக்கப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்களும், இங்கிலாந்து வீரர்களும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இதே அகமதாபாத் மைதானத்தில் மார்ச் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த பிட்ச் விவகாரம் குறித்து நாதன் லயான் பேசியுள்ளார். “உலகம் முழுவதும் இருக்கும் வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற மைதானத்தில் நாங்கள் விளையாடுகிறோம். அப்போது சில நேரங்களில் 47, 60 ரன்களுக்கு கூட ஆல் அவுட் ஆகிறோம். அப்போதெல்லாம் நாங்கள் எந்த குறையும் சொல்வதில்லையே. ஆனால் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக பிட்ச் மாறியதும் ஏன் அது குறித்து எல்லோரும் அழுகிறார்கள் எனத் தெரியவில்லை. எனக்கு புரியவும் இல்லை. ஆனால் இது பயங்கர பொழுதுபோக்காக இருக்கிறது” என இங்கிலாந்தை நக்கலடித்துள்ளார்.

மேலும் “நான் அகமதாபாத் டெஸ்ட் போட்டியை இரவு முழுவதும் கண் முழித்து பார்த்தேன். மிகவும் அருமையான போட்டி. அந்த பிட்ச் அசத்தலாக இருந்தது. அந்த பிட்சை வடிவமைத்தவரை சிட்னிக்கு அழைத்து வர வேண்டும் என விரும்புகிறேன்” என தடாலடியாக தெரிவித்துள்ளார் நாதன் லயான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *