வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் ஓய்வு

வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார், சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

37 வயது வினய் குமார், இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2010-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். எனினும் 2013-க்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

2004 முதல் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வந்த வினய் குமார், கடைசியாக புதுச்சேரி அணி சார்பாகக் கடந்த வருடம் ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடினார். 139 ஆட்டங்களில் 504 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ரஞ்சி போட்டியில் 442 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். (அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர்களில் நான்காம் இடம்.)

கர்நாடக அணிக்குத் தலைமை தாங்கி ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, இராணி கோப்பை என மூன்று பட்டங்களையும் அடுத்தடுத்து இரு வருடங்களிலும் வென்று சாதனை படைத்தார் வினய் குமார்.

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி, கேகேஆர், மும்பை இந்தியன்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…