இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியும், மற்றொரு போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் தொடரில் அணியில் இடம் கிடைக்காத நடராஜனுக்கு டி-20 தொடரில் இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

அணி விவரம்

விராட்கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவண், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சாஹல், வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் டிவாட்டியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப், ஸ்ருதல் தாகுர்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…