பஞ்சாப் அணியில் தமிழக வீரர்

14-வது ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு, ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதுவே அதிக ஏலத்தொகையாகும்.

இதில் தமிழக அணி வீரர் ஷாருக்கானுக்கு ரூ.20 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு ஏலம் நடந்தது.

சமீபத்தில், நடந்த முஷ்டாக்அலி கோப்பைப் போட்டியில் தமிழக அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஷாருக்கானின் ஆட்டம் காரணமாக அமைந்தது.

தமிழகத்தில் நடக்கும் டிஎன்பிஎல் போட்டியில், லைகா கோவைகிங்ஸ் அணியில் ஷாருக்கான் விளையாடி வருகிறார். அதிரடியாக ஆடக்கூடிய ஷாருக்கானை எடுக்க கொல்கத்தா, ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஷாருக்கானை வாங்கியது.