டு பிளெசிஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டு பிளெசிஸ், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2012-13 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டு பிளெசிஸ் அறிமுகமானார். அறிமுக ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருதை வென்று, அசத்தினார். டு பிளெசிஸ் இதுவரை 69 டெஸ்ட்களில் விளையாடி, 10 சதங்கள், 21 அரைசதங்கள் உட்பட 4163 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள டு பிளெசிஸ், ”ஒரு நாள் மற்றும் டி20 ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடுவேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டு டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. என் கவனம் முழுவதும் டி20 போட்டிகள் பக்கம் திரும்பியுள்ளது. உலமக் முழுவதிலும் நடக்கும் டி 20 போட்டிகளில் சிறந்து விளங்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.