2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு புதிய பெயர்

14 ஆவது இந்த ஆண்டு ஐபிஎல் டி20 தொடருக்கான ஏலம் வரும் 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை பத்தாக அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த ஆண்டு ஏலத்தில் பங்கேற்கும் 8 அணிகளும், தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள், விடுவிக்ககப்பட்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐயிடம் வழங்கிவிட்டன.

பஞ்சாப் அணி, நீண்ட காலமாகவே, பெயரை மாற்ற வேண்டும் என் கோரிக்கை வைத்து வந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாகவே கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின்பெயர் மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதனையடுத்து, தற்போது உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி என்ற பெயர், பஞ்சாப் கிங் என மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பஞ்சாப் அணி, 16 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டு, 9 வீரர்களை விடுவித்துள்ளது. இதனால் 18 ஆம் தேதி நடைபெறும் ஏலத்தில், 5 வெளிநாட்டு வீரர்கள் 4 உள்நாட்டு வீரர்கள் என வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.