2ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து தடுமாற்றம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது இன்னிங்கிஸில் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
116 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து, இங்கிலாந்து அணி வெற்றி வாய்ப்பை இழந்து வருகிறது.
குல்தீப் யாதவ், தன் இரண்டு வருட டெஸ்ட் வாழக்கையில் முதல் விக்கெட்டை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.