2வது டெஸ்ட் : ரோஹித் சர்மா அதிரடி சதம்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் தொடக்க வீரர் சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ஆனால், ஆரம்பம் முதலே அதிரடி காட்டி வந்த ’ஹிட்மேன்’ ரோஹித், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து வந்தார். இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் தனது ஏழாவது சதத்தைப் ரோஹித் சர்மா பதிவு செய்தார்.