சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வி

கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில், நடப்பு சாம்பியனான சோபியா கெனின், 65 ஆம் நிலை வீராங்கனையான கயா கனைபியோடு மோதினார்.

64 நிமிடம் நடைபெற்ற ஆட்டத்தில், சோபியா கெனின் 3-6,2-6 என்ற நேர்செட்டில் கனேபியுடம் தோல்வியடைந்துள்ளார்.
தோல்வியடைந்த சோபியா கெனின், “நான் நெருக்கடியை சிறப்பாக கையாளவில்லை. இது போன்ற அனுபவத்தை எதிர்கொண்டது கிடையாது. உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் முழு தகுதியுடன் இல்லை” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.