#நீட்டை தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது என பாஜகவிற்கு நல்லா தெரியும்.

Ban__NEET

சிங்கத்தை அதன் குகையிலே எதிர்கொண்ட வீரனைப் போல், ஒன்றிய பாஜக அரசின் அடியாளை நேர்கொண்டு எதிர்த்த அம்மாசியப்பன் ராமசாமி அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது போல் தமிழ்நாட்டிற்கு மட்டும் நீட்டிற்கு விலக்குத் தந்தால், அதன்மூலம் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் தேர்தல் ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்புண்டு.

இருப்பினும் ஏன் பாஜக இவ்வளவு தீவிரமாக நீட்டை தமிழ்நாட்டின் மீது திணிக்க வேண்டும்? பாரதம் எனும் மனுதர்ம கொள்கை கொண்ட நாட்டை கட்டியமைப்பதே பாஜகவின் சித்தாந்தம், கொள்கை. அதற்குத் தடையாக தமிழ்நாடு எனும் திராவிட இயக்க பெரியார் மண் இருக்கிறது.

சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் எனும் கருத்தாக்கங்களை முன்னிறுத்திய அம்பேத்கரை உள்வாங்கிய மண்ணாக தமிழ்நாடு திகழ்கிறது. நால்வர்ண முறையில் அமைந்த சாதி எனும் உற்பத்தி முறையை தகர்த்தெறிய போராடிய மார்க்சை உள்வாங்கிய மண்ணாக தமிழ்நாடு திகழ்கிறது.

மொழி உணர்வு, சிறுபான்மையினர் ஆதரவு, இடஒதுக்கீடு, மாநில சுயாட்சி என இந்தியாவிற்கு சித்தாந்த தலைமையாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டை சீரழித்தால், தமிழ்நாட்டின் தனித்தன்மையை சீரழித்தால் இந்தியாவை தன்போக்கு மாற்றமுடியும். மனுதர்மத்தை மீண்டும் சட்டமாக்க முடியும் என பாஜக நம்புகிறது.

அதன் விளைவாக, கடந்த 100 ஆண்டுகளில் தமிழ்நாடு எதையெல்லாம் செய்ததோ, அவற்றையெல்லாம் கொச்சைப்படுத்துகிறது. திராவிட இயக்கங்களை குறி வைக்கிறது. அதன் ஒரு பகுதியே நீட் திணிப்பு. உன்னைவிட(தமிழ்நாட்டை) விட நாங்கள் (பாரதம்) பெரியது என்று கொக்கரிக்கிறது பாஜக. சிறுபிள்ளைத்தனமாக பேசாதே சங்கியே,

 “1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாடு முதல் 2023 வள்ளுவர் கோட்டம் நீட் எதிர்ப்பு போராட்டம் வரை, ஹரப்பா முதல் கீழடி வரை, சிந்து நதி முதல் தாமிரபரணி வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கோவில் நுழைவுப் போராட்டம் முதல் அனைத்துச் சாதி அர்ச்சகர் வரை, 1920இல் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் முதல் 2023இன் காலை உணவுத் திட்டம் வரை, இந்தி திணிப்பு எதிர்ப்பு முதல் நீட் திணிப்பு எதிர்ப்பு வரை”

இந்தியாவை கட்டமைப்பதே நாங்கள் தான் என கெத்தாக, அறிவுச் செருக்கோடு, கொள்கைத் தெளிவோடு பதில் சொல்கிறது தமிழ்நாடு, பார்ப்பனிய எதிர்ப்பு திராவிட நாடு. 

சு. விஜயபாஸ்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *