மருத்துவர்களை பாதுகாக்க முடியாதா.. பெண் மருத்துவர் கொலை வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் கேள்வி..

ஊடகர் வெங்கட்ராம்.
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிருக்கும் கேடு என்று எவ்வளவு கூறினாலும் சில ஜென்மங்கள் திருந்துவதே இல்லை. மதுவை அதிகமாக குடித்து தன்னை கெடுத்துக்கொள்வது மட்டும் இல்லாமல் அடுத்தவன் உயிரையும் ஆபத்தில் தள்ளுவது தொடர்கதையாகி விடுகிறது. அப்படிதான் கேரளாவில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அழைத்து வந்த போதையில் இருந்த கைதி அங்கே சிகிச்சை அளித்து கொண்டிருந்த மருத்துவரை கத்திரியால் தாக்கிவிட்டு மேலும் சிலரை தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார். இதில் அந்த பெண் மருத்துவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் பதறினர். இந்த சம்பவத்தை அடுத்து கேரள உயர்நிதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை பதிவுசெய்துள்ளது. டிஜிபி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது