2 ஆயிரம் ரூபாய் நோட்டு இருக்கா இல்லையா? – ஆதனூர் சோழன்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தபோது என்னென்னவோ கதைகளை க்ட்டி பறக்க விட்டார்கள்.

மோடியின் மூளையில் உதித்த இந்த யோசனையால் பாகிஸ்தான் கள்ளநோட்டு அடிப்பதை தடுத்திருக்கிறோம். ரூபாய் நோட்டில் உள்ள சிப் மூலம் உளவறிய முடியும். முக்கியமாக கள்ளநோட்டு அடிப்பதை சுத்தமாக தடுத்து, கருப்புப் பணத்தை ஒழித்துவிடலாம் என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால், ரூபாய் நோட்டு மதிப்பிழப்புக்கு பிறகு நாட்டின் தொழில்கள் சீரழந்தன. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. பல பணக்காரர்கள் நடுத்தெருவுக்கு வந்தார்கள். அதானி மாதிரி புதிய பணக்காரர்கள் உலக பணக்காரர் வரிசையில் வேகமாக முன்னேறினார்கள்.

இதுஒருபுறம் இருக்க, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இப்போது வங்கிகளிலும் பார்க்க முடியவில்லை. பொதுவிலும் புழக்கத்திலும் இல்லை.

சமீபத்தில் கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ ஒருவரின் மகன் டெண்டரை ஓ.கே.செய்வதற்காக 8 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டார். அப்போது அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 8 கோடி ரூபாயையும் அவருடைய டேபிளில் பரப்பியிருந்தார்கள்.

இதுவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்தாலம் இவ்வளவு பிரமாண்டமாக தெரிந்திருக்காது இல்லையா?

மேஜையில் பரப்பப்பட்ட அந்தக் கட்டுகளில் கூட 2 ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்றுகூட இல்லை. கட்டு என்னங்க கட்டு… ஒரே ஒரு 2 ஆயிரம் ரூபாய் தாளைக்கூட காணோம்…

அப்படியானால், 2 ஆயிரம் ரூபாய் தாள் இருக்கா இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *