உதயநிதியும் ஊடகங்களின் உளறல்களும்! – ஆதனூர் சோழன்

Udayanidhi

தமிழ்நாடு அமைச்சரான பின்னர் உதயநிதியின் முதல் டெல்லி பயணம் பலருக்கும் பலவிதமான கற்பனைகளுக்கு இடம் கொடுத்துவி ட்டது.

யூடியூப் சவுக்குகளும், தினமலர்களும் தங்களுக்கு தோன்றிய அபத்தமான கற்பனைகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். ஈரோடு இடைத்தேர்தல் முடிந்த கையோடு உதயநிதி டெல்லி செல்வது ஏன் தெரியுமா? அதன் பின்னணி தெரியுமா ? பாஜகவுடன் ரகசிய டீல் பேசவே உதயநிதி செல்கிறார். அவருடன் தி முகவின் மூத்த எம்.பி .க்கள்கூட செல்லவில்லை . அவர்களுக்கு முக்கியத்துவம் கி டைத்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் தவிர்க்கப்பட்டனர் என்றெல்லாம் யூகச்செய்திகளை அள்ளிவி ட்டா ர்கள்.

தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த கையோடு பிரதமரை சந்தி்ப்பது அவரை கூல் செய்வதற்காகவே என்றும் கருத்து உருவாக்கினார்கள்.

இது ஏதோ உடனடியாக ஏற்பா டு செய்யப்பட்ட சந்திப்பு என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தன. அப்படி உடனுக்குடன் ஏற்பாடு செய்ய முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பன்வாரிலா ல் புரோ கி த்தி ன் பே த்தி தி ருமணம் உடனடியா க ஏற்பா டு செய்யப்படவில்லை என்பதும், அதற்கான அழைப்பிதழ் வெகு நாட்களுக்கு முன்னரே அனுப்பப்பட்டிருக்கும் என்பதுமே இட்டுக்கட்டப்பட்ட கருத்துகளை முறியடித்துவிட்டன.

Udayanidhi

அடுத்தபடியாக பிரதமருடன் மரி யா தை நி மி த்தமா க உதயநி தி சந்தி க்கப்போ வதா க அறி வி க்கப்பட்டிருந்தது. அதையும் தாண்டி உதயநிதி மோடியை சந்தித்த பின் தெரிவித்த உண்மை பலரையும் வியக்க வைத்தது.

டெல்லி வரும்போ து தனது இல்லத்திற்கு வரும்படி பிரதமர் கூறியிருந்ததார் அதன்படியே அவரை சந்தி த்ததாகவும் உதயநிதி கூறினார். இந்தச் சந்திப்பின்போது, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டதாகவும், பிரதமர் அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து, நீட்டை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்ட போராட்டத்தை நடத்தும் என்று பிரதமரிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் உதயநிதி பிரதமர் மோடியிடம் வெளிப்படுத்திய உடல்மொழி தான் முக்கியமான கவனத்தை ஈர்த்துள்ளது. ஆம், வெகு இயல்பாக அவர் நடந்துகொண்டார். ஓபி எஸ், ஈபிஎஸ் போல பம்மி பணியாமல், ஒரு அமைச்சர் என்ற நிலையிலும் தமிழ்நாட்டின் கெத்தை வெளி ப்படுத்தினா ர் உதயநிதி .

இது அரசு வெளி யி ட்ட புகைப்படங்களில்கூட தெ ரியும். இந்தச் சந்திப்பி ன் முக்கியத்துவம் என்ன தெரி யுமா? தான் ஒன்றும் கத்துக்குட்டி அல்ல, பிரதமரா க இருந்தாலும் தனியாக சந்தித்து பிரச்சனைகளைப் பேசும் ஆற்றல் தனக்கு உண்டு என்பதை அவர் தனது எதிரி களுக்கு வெளி ப்படுத்தியி ருக்கிறார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *