“என் அம்மா” சிறப்பு கட்டுரை

‘தாயிற் சிறந்த கோயில் இல்லை ‘ என்று ஔவையார் தாய்மையின்
சிறப்பைப்பற்றி அன்றே பாடியுள்ளார். இவ்வுலகிலுள்ள அனைவரும்
தாய்மை என்பதை ஒரு புனிதமான உறவாகக் கருதுகின்றனர். ஏனென்றால்
தாய்மை என்பது ஒரு பெண்ணுக்குப் பல இன்னல்களைக் கடந்து
இறைவனின் அருளால் கிடைக்கும் அற்புதமானவரம். அன்பு என்ற
சொல்லுக்கு அர்த்தம் தாய் என்றும் கூறலாம்.


அன்னை இல்லையெனில் இவ்வுலகில் மனித இனமே இருந்திருக்காது.
இவ்வுலகமே செயல்பட காரணமாக இருக்கும் நம் கண்ணெதிரே நடமாடும்
தெய்வங்களான நம் தாயின் தியாகம், வலி , அன்பு, சிறப்பு மற்றும் கனவு
ஆகியவற்றைப்பற்றி இக்கட்டுரையில் முழுமையாக காண்போம்.

“கதிரவன் இல்லாது பகலில்லை
சந்திரன் இல்லாது இரவில்லை
மேகம் இல்லாது மழையில்லை
விவசாயி இல்லாது சோறில்லை
அலை இல்லாத கடலில்லை
போட்டி இல்லாத வாழ்வில்லை
உணர்வு இல்லாத மனிதனில்லை
தாயே நீயில்லாது நானில்லை
உன்னை என் கடைசி மூச்சி
இருக்கும்வரை என்
உள்ளங்கையில் வைத்துப்
பார்த்துக் கொ ள் வே ன்
இது சத்தியம் !!! “

அம்மா பற்றிய கட்டுரை - Tamil Tips

தாயின்‌ தியாகம்

தியாகத்தின் மறுஉருவமே அம்மா. ஒரு பெண்‌தான் தாயாக உருவெடுத்த
அக்கணத்திலிருந்தே தியாகம்‌ செய்யத் தொடங்கிவிடுகிறாள். அவள் தான்
உண்ணும் உணவின் பாதியை தன் வயிற்றிலுள்ள குழந்தைக்கு தியாகம்
செய்கிறாள். அவள் தன் குழந்தையை பெற்றெடுக்க இறப்பின் வாசல் வரை
செல்கிறாள். அவள் தன் உதிரத்தையே பாலாக தந்து குழந்தையை
வளர்க்கிறாள். குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தைக்கு என்னென்ன செய்ய
வேண்டும், எம்மாதிரியான உணவை சமை த்துக் கொடுக்க வேண்டும், எந்த
பாடசாலையில் சேர்க்கலாம் என முழுநே ரமும் தன்‌ குழந்தையின்
நலனைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் யோசித்து தன்னை பற்றி
யோசிக்க மறந்து விடுகிறாள். சில நேரங்களில் குழந்தை இரவில் உறங்காமல் அழுதுக்கொண்டே இருக்கும். அப்போது, அக்குழந்தையை சமாதானம்படுத்தி
உறங்கவைக்க தன் உறக்கத்தையே தியாகம் செய்கிறாள்.
ஒருதாயானவள் தன் குழந்தையை பெற்றெடுத்து அதனை பாராட்டி
சீராசீராட்டி பாதுகாத்து வளப்பதற்காக தன்னையே அற்பணிக்கிறாள். ஒரு தாய்
தன் விருப்பு வெறுப்பைத் துறந்து தன்னுடைய பிள்ளைக்காக வாழ்கிறாள்.


“மறுபிறவிஇருந்தால்
அதில் செருப்பாக பிறக்க வேண்டும்…
என் அன்னை காலில்
மிதி பட அல்ல…
என்னை சுமந்த அவளை
ஒருமுறை நான்
சுமப்பதற்காக… “


தாயின் அன்பு


இவ்வுலகில் விலை கொடுத்து வாங்க முடியாதது தாயும் அவளி ன் அன்பும்
தான். இவ்வுலகில் நமக்கு எத்துணை உறவுகள் இருந்தாலும் நம்மீது அன்பு
செலுத்தினாலும் அவை தாயின் அன்பிற்கு ஈடாகாது. ஐந்தறிவுள்ள விலங்குகளே
தான் ஈன்ற குட்டிகளுக்கு உணவளித்தும் அவைகளை பேணிப்பாதுகாத்தும்
தனது அன்பினை வெளிப்படுத்துகிறது. தாயின் வயிற்றில் வளரும் குழந்தை
ஆணா பெண்ணா , கருப்பா சிகப்பா , நற்குணம் உடையதா இல்லை தீயகுணம் உடையதா என்பதைப் பற்றியெல்லாம் அறியாமல் அதன்மேல்
அளவுகடந்த அன்பு வைக்கிறாள்.

அன்பின் சிகரம் அம்மா கட்டுரை - Tamil Tips

சில சமயங்களில் நாம்‌ நமது படிப்பிற்காகவும் வேலைக்காகவும் நம்
தாயை விட்டு தள்ளியிருக்க நேரிடும். அப்போது, நாம் மறந்தாலும் அவள்
மறவாமல் தினமும் தொலைபேசியில் அழைத்து நம்முடைய நலனை
விசாரிப்பாள். இதற்கு அவள் நம்மேல் வைத்த அன்பும் அக்கறையுமே
காரணம். ஒரு தாய்க்கு பத்து குழந்தைகள் இருந்தாலும், அவள் ஒவ்வொரு
குழந்தையின் மேல் வைக்கும் அன்பிற்க்கு வித்தியாசம் இருக்காது. இதுவே
தாய்மையின் சிறப்பு.


” காயங்கள்‌ ஆறி போகும்
கற்பனைகள் மாறி போகும்
கனவுகள்‌ களைந்து போகும்
ஆனால் என்றுமே மாறாதது
தாய்‌ நம் மீதுமீ கொ ண்ட பாசம் “


தாயின் தாலாட்டு


என்னதான் ‘அரபிக்குத்து’ , ‘ ரவுடிபேபி ‘ என பல பிரபலமான பாடல்கள்
வந்தாலும் அவைகள் நம் தாயின் தாலாட்டுப் பாட்டுக்கு ஈடாகாது.
குழந்தையின் அழுகையை நிறுத்தவும், உறங்கவைக்கவும் தாய் தன்
இனிமையான குரலில் தாலாட்டு பாடுவாள். தாலாட்டுப் பாடல்கள்
இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை
மெய் மறந்து தூங்குகின்றது. “தால்” என்பது நாவைக் குறிக்கும். நாவினால்
ஓசை எழுப்பி குழந்தையை உறங்கவைப்பதால் தாலாட்டுதல் என்று கூறுவர்.
தாய் தன் குழந்தையை மடியிலோ , தோளிலோ , கைகளிலோ , தொட்டிலிலோ
வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். ஆராரோ ஆரிரரோ என்ற
சந்தத்தின் மூலம் ஓசை எழுப்புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லபடும்.

தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ , ஆராரோ ,
ஆரிரரோ என்ற சொற்களைப் பயன்படுத்துவர்.


“ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே யடிச்சாரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
மாமன் அடித்தானோ
மல்லி பூச் செண்டாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொம்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதா ய்
கண் மணியே கண்ணுறங்கு “


தாய் – குடும்பத் தலை

ஒரு தாய் குடும்பத் தலைவியாகயிருந்து அக்குடும்பத்தை நிர்வகிக்கிறாள்.
ஒரு தாயானவள் தன் வாழ்நாள் முழுவதும் அவளின் குடும்பத்திற்க்காக
உழைக்கிறாள். அவள் வீட்டின் வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொள்வது, சந்தைக்கு சென்று பொருட் களை வாங்கு வது, சமையல்
செய்வது, பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வது, ஆடை களை
துவைப்பது, பாத்திரங்களை சுத்தம் செய்வது என்று பலவேலைகளை
ஓய்வின்றி தன் குடும்பத்திற்கு செய் கிறாள். ஆக, அவளின் குடும்பத்தார்கள்
அவள் மனம் புண் படும்மாறு பேசுவதை தவிர்க்க வேண்டும். உடல் நலன்
சரியில்லாத நேரங்களில் அவளின் குடும்பத்தினர் அவளை பத்திரமாக
பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களின் பொறுப்பு.
” நா ன் ஒருபோதும்
கோவிலுக்கு சென்றதில்லை
என் அம்மா
என் அருகிலிருந்தவரை “
குழந்தை வளர்ப்பு
ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தாயின் பங்கு நிறைய உண்டு . குழந்தை
தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதிலிருந்தே கற்க தொடங்கிவிடுகிறது.
தாய் இல்லாத குழந்தை வளர்ப்பு என்றும் முழுமை பெறாது. தாயின்
அரவணைப்பு குழந்தையின் மனவளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் மிக
அவசியம். உடல் மற்றும் மன ஆற்றலை தருவதில் தாய்க்கு மட்டுமே சிறப்பான
இடம் உண்டு.

ஒரு தாயானவள் தன் குழந்தைக்கு சிறுவயதிலிருந்தே நற்பண்புகளைச்
சொல்லி வளர்க்க வேண்டும். குறிப்பாக ஒரு தாய் தன் பெண்குழந்தைக்கு
தைரியத்தையும் தீயதொடுதல் பற்றியும் சொல்லிக்கொடுத்து வளர்க்க
வேண்டும். அதே போல் தாய் தன் ஆண்குழந்தைக்கு பெண்களிடம் எப்படி
நடக்க வேண்டும் என்பதை சொல்லிதர வேண்டும்.

அம்மா பற்றிய கவிதை வரிகள் - Quotes Loop

‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே.
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே … என்பது
சினிமா பாடலாகும். அந்த வகையில் தாயானவள் ஒரு பிள்ளையின்
வாழ்வை செம்மைச் செய்வதில் தனது பங்களிப்பை உச்ச அளவி ல்
செய்கின்றாள். எந்த குழந்தையும் முதலில் காணும் உருவமும் உறவும்
அன்னையே ஆகும். தந்தையை கூட தாய் சொல்லித்தான் அறிகிறது.
குழந்தைக்கு பண்பாடும் பழக்க வழக்கமும் கற்று தருவது தாயால் மாத்திரமே
முடியும். வாழ்க்கையை செம்மைச் செய்வதும் சீர்சீர் செய்வதும் புனிதமான
தாயன்பே ஆகும். இதனை கற்றுத்தருவது தாயே . குழந்தை வளர்ந்து
வரும்போ து அதன் ஒவ்வொரு பருவத்திலும் தேவையான ஒவ்வொன்றையும்
கற்றுத்தருவதும் தேவைகளை பூர்த்தி செய்வதும் தாயினால் மட்டுமே
முடிகிறது.

சமுதாயத்தாலும் சூழ்நிலையாலும் பிள்ளைகள் தீய வழிகளில் ஈடுபடும்
வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றமையை நாம் அனைவரும்
காணக்கூடியதாக உள்ளது. அத்தகையவர்களை தன் அன்பாலும்
அரவணைப்பாலும் நல்வழிப்படுத்துவது தாய்.
” என்னோடு நீ நடந்து வந்தவரை இந்த வழித்தடத்தில் முட்கள் இல்லை அம்மா!

தாய்மையின் சிறப்புகள்


தாய் என்பவள் நம் அனைவருக்கும் சிறப்பானவள். இவ்வுலகில் மிகவும்
உன்னதமான உறவு தாய். காலங்கள் மாறினாலும் என்றும் மாறாதது,
அளவிலும் குறையாதது தாயின் அன்பு. மரத்துக்கு முக்கியமானவை வேரும்
நீரும். அதே போல், குழந்தைக்கு முக்கியமானவை அன்னையும் அவளின்
அன்பும். தாயின் அன் பிற்கு மட்டுமே கல்லையும் கறைக்கும் சக்தி உண்டு.
இவ்வுலகில் சுயநலம் இல்லாத ஒருத்தி தாய். ஏனென்றால், தான் அறிந்தது
அறியாதது ஆகிய அனைத்தயும் தன்பிள்ளை கற்றுக்கொள்ள வேண்டும்
என்று விரும்புவாள். தன்பிள்ளைக்கு உடம்பு சரியில்லை யென்றால்
துடிப்பாள். தான் சாப்பிடா விட்டாலும் தன் குழந்தை வெறும் வயிற்றுடன்
இருக்க கூடாது என்று நினைப்பவள் தாய்.
ஒரு அன்னையின் இடத்தை யாராலும் நிரப்பி விடவே முடியாது. தாயன்பு
நிபந் தனையற்றது, தன்னலமில்லாதது. ஒரு குழந்தையைப் பெற்று , வளர்த்து ,
முனைப்போடு பாதுகாக்கும் திறமை தான் ஒரு அன்னையை
சிறப்பாக்குகிறது. நாம் காயப்பட்டிருக்கும் போது, அழ ஒரு தோள் வேண்டும்
என நினைக்கும் போது அம்மாவை தவிர வேறுயாரையும் நாம்
தேடுவதில்லை .

“உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே வாழும்
அன்பு தெய்வம்
அன்னை “

முடிவுரை
அன் னை என்பவள் தன் குழந்தைக்கு ஒரு வழிகாட்டி . அவள் இவ்வுலகம்
எத்தகையது இதில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றிதன்
பிள்ளைக்கு போதிப்பாள். ஒரு தாயானவள் தன் பிள்ளையை கண்டிக்க
வேண்டிய நேரங் களில் கண்டிப் பாள், தண்டிக்க வேண்டிய நேரங்களில்
தண்டிப்பாள், தட்டிக் கொடுக்க வேண்டிய நேரங்களில் தட்டிக் கொடுப்பாள்.
” மழை முகம் காணாத பயிரும் தாய் முகம் காணாத பிள்ளையும்
முன்னேறியதாக சரித்திரமில்லை ” என்பது முதுமொழியாகும். ஒரு குழந்தை
பிறந்தது முதல் நல்லனாக வளர்வதற்கு தாயின் நல்வழி காட்டல்களும்
அன்பும் கட்டாயம் அவசியமாகிறது. அப்போது தான் அக்குழந்தை அன்பு,
பாசம், ஒழுக்கம், மரியாதை போன்ற நல்ல விடயங்களை கற்று பின் பற்றும்.
ஒரு குழந்தை வாழ்வில் வெற்றி பெறவும் சமுதாயத்தோடு உடன்பட்டு
வாவும் உலகைப் பற்றி அறிந்துக் கொள்ளவும் தீய எண்ணங்களை
அகற்றவும் ஊர் சிறக்கவும் சிறந்த குடிமகான வாழவும் அன்பான தாயின்
பங்களிப்பு மிகமிக அவசியமானது. எனவே எமது அன்பான தாய்மையை
போற்றுவோம்.

Leave a Reply

Your email address will not be published.