சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீண்டாமை கொடுமை… தீயாய் பரவும் வீடியோ!

Nadarajar temple

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டும், பெண் பக்தை ஒருவரிடம் தீட்சதர்கள் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சக்கராகலாம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின் மூலமாக, கோயில்கள் ஒருகுறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே சொந்தம் கொண்டாடி வந்தது தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து சமூக மக்களும் எவ்வித பாகுபாடும் இன்றி சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கோயிலுக்குள் இன்னும் தீண்டாமை எனும் தீ கொளுந்துவிட்டு எரிவதை இன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று எடுத்துக்காட்டியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய சக தீட்சதரை தாக்கியதாக 3 தீட்சிதர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சாதியின் பெயரைக்கூறி பெண் பக்தை ஒருவரையும் ஆபாசமாக திட்டியதாக அந்த அடாவடி தீட்சதர்கள் மீது புகார் எழுந்துள்ளது, இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்றம்பலம் மேடை மீது நின்று சாமி தரிசனம் செய்ய சில குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனை தட்டிக்கேட்ட கணேஷ் என்ற தீட்சதருக்கும், பிற தீட்சதர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. அவரைத் தொடர்ந்து சிற்றம்பல மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய முயன்ற லட்சுமி என்கிற ஜெயசீலா என்பவரையும் தீட்சிதர்கள் சூழ்ந்துகொண்டு கீழே இறங்கும் படி சண்டையிட்டுள்ளனர். அந்த பெண்ணுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தீட்சிதர்கள் சாதிப்பெயரை சொல்லி ஆபாசமாக திட்டியுள்ளனர்.

மன்னர் காலத்தில் கட்டிய சிதம்பரம் நடராஜர் கோயில், என்ன உங்கள் மாமியார் வீட்டு சொத்தா? என அப்பெண் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். சர்ச்சைக்கு பெயர் போன சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் ஒருவரை அர்ச்சகர் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனையடுத்து சக தீட்சிதரான கணேஷ் என்பவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட ராஜா செல்வம் தீட்சிதர், சிவ செல்வம் தீட்சிதர் மற்றும் சபேஷ் தீட்சிதர் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பம் கோவிலுக்குள் தீண்டாமை தலைவிரித்தாடுகிறதா? என்ற கேள்வியை பக்தர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்: https://www.facebook.com/100006239374212/videos/2953019598294574/

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…