மனிதர்களும்…. ரோபோக்களும்….

தற்போதுள்ள உள்ள நவீன உலகத்தில் தொழிநுட்பங்களை பயன்படுத்தாமல் மனிதர்கள் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு மனிதர்களும் தொழில்நுட்பங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து உள்ளனர். உதாரணமாக நம்மால் மொபைல் போனை பயன்படுத்தாமல் ஒரு நாள் இருக்க முடியாது. காலையில் எழுந்து நம் பல் துலக்க  பயன்படுத்து பிரஷில் ஆரம்பித்து இரவு தூக்கம் போது ரேடியோவில் பாட்டு கேட்பது வரை தொழில்நுட்பங்கள் நம்போடு கலந்திருக்கிறது.

இப்படிபட்ட தொழில்நுட்பங்கள்  மனிதர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருந்தாலும், அதில் நிறைய தீமைகளும் இருக்க தான் செய்கின்றன. மேலும் நம்புடைய சொந்த டேட்டாவை(தரவுகளை) இத்தொழிநுட்பங்களுக்கு மத்தியில் பாதுகாப்பது என்பது சிங்ககளுக்கு மத்தியில் நாம் இறைச்சியை  உண்பது போல். என்ன தான் நாம் முயற்சி செய்தாலும் நம் டேட்டா எப்படியும் வெளியே போய்விடும். அவ்வளவுதான் தற்போதுள்ள பாதுகாப்பு வசதி. தொழில்நுட்பங்ககளில் தீமை இருந்த போதிலும் அதனை எந்தளவிற்கு பாதுகாப்பாக பயன்படுத்துகிறோம் என்பதே மிக முக்கியம். மேலும் ஒரு தொழில்நுட்பத்தை பாதுகாக்க மற்றொரு தொழில்நுட்பம், அதனை காக்க மற்றொன்று என மனிதர்களை பயன்படுத்தி தொழிநுட்பங்கள் வளர்ந்து கொண்டே போகிறது.

மனிதனின் வேலையை குறிப்பதற்காக வந்தது தான் கணினி, அக்கணினி வேலையை குறைக்க வந்து தான் இணையம், அந்த இணையத்தை மேலும் சிறப்பாக இயங்க வைக்க வந்தது தான் செயற்கை நுண்ணறிவு(Artificial  Intelligence) இப்படி ஒரு தொழில்நுட்பம் மற்றறொன்றை சார்ந்தே இருக்கிறது. இந்நிலையில் மனிதர்கள் கடைசியாக கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவை எப்படி ரோபோக்களுக்கு செலுத்துவது என்பதே தற்போது விஞ்ஞானிகள் முன் வைக்கப்பட்டிருக்கும் கேள்வி. இதற்கு பதில் அடுத்த இரண்டு ஆண்டுக்குள் கிடைத்துவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தியே.ரோபோக்கள் மனிதர்களுக்கு சேவை செய்யவே உருவாக்கபட்டவை. ஒரு மனிதன் ஒரு வேலையை செய்து முடிக்க 1 மாதம் எடுத்து கொண்டால், ரோபோக்கள் அதே வேலையை ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கும். இதனாலேயே பெரும்பாலான பெருநிறுவனங்கள் மனிதர்களுக்கு பதில் ரோபோக்களை வேலை ஈடுபடுத்துகின்றனர். இதனால் நிறைய மனிதர்களுக்கு வேலை வாய்ப்பும் போயுள்ளது. 

குறிப்பாக சொல்ல போனால் தொழில்துறை இயந்திரங்கள் தோன்றியபோது சமூகத் துறையில் ஒரு வலுவான மாற்றம் ஏற்பட்டது, இது நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களைக் கொண்டு வந்தது; மனிதன் இயந்திரத்தால் மாற்றப்பட்டபோது, ​​நூற்றுக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர், குறிப்பாக ஜவுளித் தொழிலில்.இந்த காரணத்திற்காக, இயந்திரத்தால் மனிதனின் இயக்கம் குறித்து இன்னும் ஒரு மறைந்த அக்கறை உள்ளது. இருப்பினும், இந்த இயந்திரங்களுக்கு சிறப்பு பராமரிப்பு தேவைப்பட்டது, ஏனெனில் அவற்றின் அமைப்புகள் மிகவும் பழமையானவை. அவை உடைந்து போகத் தொடங்கியபோது, ​​தொழில்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது.தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், நிறுவனங்களின் சரியான வளர்ச்சிக்கு மனித இருப்பு எப்போதும் அவசியமாக இருக்கும் என்பதை இது காட்டுகிறது, ஏனெனில் இயந்திரங்களுக்கு நிலையான ஸ்கேனிங் மற்றும் பல திருத்தங்கள் தேவைப்படுகின்றன.எனவே, புதிய ரோபோக்கள் தோன்றுவதால் மனிதர்களுக்கு புதிய வேலைகள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது.

இப்படி ஒவ்வொரு துறையாக ரோபோக்கள் கைப்பற்றி கொண்டிருக்கும் நிலையில், தற்போது ரோபோக்கள் எந்த துறையில் கால் பதித்திருக்கிறது என்று தெரியுமா? ரோபோக்களால் தற்போது குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்.

உலகின் பல்வேறு நாடுகளில் இரும்பு, பிளாஸ்டிக்கால் ரோபோக்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் இருந்து வேறுபட்டு உயிரி ரோபோக்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் மனிதர்கள் . இப்போது ஜீனோபாட்ஸ் 3.0 ரோபாவை உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றால் தங்களைப் போன்றே குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். இந்த ரோபோ ஆராய்ச்சியின் மூலம் விபத்தில் படுகாயமடைந்த மனிதர்களை குணப்படுத்த முடியும். பிறவி குறைபாடுகள், புற்றுநோயை குணப்படுத்த முடியும். முதுமை பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். ஜீனோபாட்ஸ் 3.0 ரோபாவை உருவாக்கியவிஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றுள்ள டப்ட்ஸ்பல்கலைக்கழக விஞ்ஞானி பிளாகிஸ்தான் கூறும்போது, “ஆய்வகத்தில் ஒரு ஜீனோபாட்ஸ் ரோபோ குழந்தையை பெற்றெடுக்க 5 நாட்கள் ஆகிறது. இதுவும் அச்சு, அசல் ஜீனோபாட்ஸ் ரோபோ போன்றே இருக்கிறது. எதிர்காலத்தில் அணுக் கழிவு, கடலில் சேகரமாகும் மைக்ரோபிளாஸ்டிக் கழிவு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜீனோபாட்ஸ் ரோபோவை பயன்படுத்த முடியும்” என்று கூறியுள்ளார். இக்கட்டுரையில் நாம் இரண்டே இரண்டு துறைகளில் தான் ரோபோக்கள் செய்த சாதனையை பற்றி தான் பேசியுள்ளோம். இதுவே போதும் ரோபோவின் வளர்ச்சி எந்த அளவிற்கு மனிதர்களை பாதித்துள்ளது என்பதை விவரிக்க. மனிதர்களை புறம் தள்ளிவிட்டு அனைத்து துறைகளிலும் ரோபோக்களையே வேலையில் அமர்த்துவது என்பது இயற்கைக்கு எதிரானது. மேலும் ரோபோக்கள் எப்போதும் மனிதர்களுக்கு ஈடாகாது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…