மருத்துவக் கழிவு மேலாண்மை

மருத்துவத் துறையின் அதீத வளர்ச்சியின் காரணமாக இன்றைய நவீன யுகத்தில் மருத்துவக்கழிவு மேலாண்மை என்பது மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. சமூகத் தேவையின் காரணமாக  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பெருமளவில் அதிகரித்ததின் காரணமாக மருத்துவக் கழிவுகளின் அளவும் வெகுவாக அதிகரித்திருக்கிறது.இந்திய அளவில் முன்னோடியாக தமிழகம்  முழுவதும் 23277  சுகாதார நிலையங்கள் உள்ளன இவற்றில் இருந்து ஒரு நாளைக்கு ஏறத்தாழ 58272 கிலோகிராம் மருத்துவ கழிவுகள் உற்பத்தியாகிறது.

இடர்கள்

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு  மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என  மாநில அரசுகளுக்கு  அறிவித்திருந்தது ஆனால் இன்றளவும்  தமிழகத்தின் பல நகரங்களில் மருத்துவ கழிவுகளை கையாளுவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.
குறிப்பாக சென்னையில் மட்டும் உற்பத்தியாகும்  மூன்றில் இரண்டு பங்கு கழிவுகள் முறையாக கையாளப்படவில்லை.மருத்துவ கழிவுகள் பெரும்பாலும்  நிலங்களில் கொட்டப்படுகிறது  அதுமட்டுமில்லாமல் பொதுவிடங்களில் குறிப்பாக   நீர்நிலைகளில் கொட்டப்பட்டு வருகிறது.

மருத்துவக் கழிவுகளால் சூழலியல் பிரச்சனைகள் மட்டுமல்லாது மனிதர்களுக்கு  எண்ணற்ற இடர்கள் ஏற்படுகிறது. மனிதர் வசிப்பிடங்களுக்கு அருகில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளில் இருந்து  அருவெறுக்கத்தக்க நாற்றம் வெளிப்படுகிறது  இது பலருக்கு ஒவ்வாமையை உண்டாக்குகிறது  அதோடு மட்டுமல்லால்  மருத்துவக்கழிவுகள்   நோய் பரப்பக்கூடிய உயிரிகள்  அதிகளவில் பெருகுவதற்கு முக்கிய காரணியாகிறது. இதன் காரணமாக காலரா, டைபாய்டு உட்பட எண்ணற்ற நோய்கள் பரவக்கூடிய அபாயம் உள்ளது.

பொது மருத்துவ கழிவுகளை சுத்திகரிப்பதற்கான  வசதிகள்  பற்றாக்குறை

மருத்துவக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்க மிக முக்கிய காரணம் பொது மருத்துவ கழிவுகள் சுத்திகரிப்பு நிலையங்கள்  பற்றாக்குறையே ஆகும். தமிழகத்தில்  மொத்தமாக  11 பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த நிலையங்களின் மொத்த செயல்திறன் நாளொன்றுக்கு ஏறத்தாழ  34,160 கிலோகிராம் ஆகும். அப்படியென்றால் ஒரு நாளைக்கு 20,000 கிலோகிராமிற்கும் அதிகமான மருத்துவ கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் கொட்டப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதை நாம்  புரிந்து கொள்ள வேண்டும் .

 2009 ஆண்டிலிருந்து 2017 ஆண்டுவரை பற்றாக்குறையை பூர்த்தி செய்ய  கணிசமான அளவில் பொது மருத்துவ கழிவுகள் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனாலும் தற்பொழுது தமிழ்நாட்டில் 11 பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு மைய்யங்கலே உள்ளன.

கர்நாடகா,கேரளா, ஆகிய மாநிலங்களில்  25க்கும் மேற்பட்ட   மருத்துவக்கழிவு நிலையங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில்  மட்டும் 38 மருத்துவக்கழிவு    சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. மேற்கண்ட மாநிலங்களோடு  ஒப்பிடுகையில் தமிழகம் மோசமான அளவில் மருத்துவ கழிவுகளை கையாண்டு வருகிறது.

தமிழகத்தின் வளர்ச்சியுற்ற பல மாவட்டங்களில் கூட  பொது மருத்துவக்கழிவு    சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படாத நிலையே  உள்ளது.தமிழகத்தின் மிகமுக்கிய நகரமான மதுரையில்  நாளொன்றுக்கு 1500 கிலோகிராம்  உற்பத்தியாகும் நிலையிலும் அங்கு ஒரு பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் கூட அமைக்கப்படவில்லை.

மதுரையின் மொத்த மருத்துவக் கழிவுகளும் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் ராம்கி ஆற்றல் மற்றும் சுற்றுசூழல் நிறுவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது. ராம்கி நிறுவனத்தின் மொத்த செயல்திறன் 4000  கிலோகிராம் ஆகும். ஆனால் அங்கு  மதுரை மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள நான்கு மாவட்ட மருத்துவக் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் போதுமான சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாத காரணத்தால்  மதுரை மாவட்ட மருத்துவக் கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில் மருத்துவக் கழிவுகளின் நிலை :
மருத்துவக் கழிவுகளை கையாளுவதில் நிலவும் குறைபாடுகளோடு தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்று அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகரிக்கும் கொரனோத் தொற்றின் காரணமாக மருத்துவக் கழிவுகளை கையாளுவதில் ஏற்படும் சிக்கலால் மேலும் தொற்று அதிகரிக்கும் சூழலும் உருவாகி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனாவிற்கு முன்னர் ஒரு நாளில் ஒரு நோயாளியின் படுக்கைக்கு 1.59 -2.2 kg மருத்துவ கழிவுகள் வெளியிடப்படும் இதில் 10-15% உயிரி மருத்துவக் கழிவுகளாகும்.இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பின் இதன் அளவானது மூன்று நான்கு மடங்குகள் கிட்டத்தட்ட ஒரு படுக்கைக்கு ஒரு கிலோகிராம் என்றளவில் உயர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களின்(CBMWTF) திறன் : (சமிபத்தில் இணைக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் உள்ள 21டன் தனியார் சுத்திகரிப்பு நிலையத்தையும் சேர்த்து) = ஒரு நாளைக்கு 55.16டன்
தமிழகத்தில் 2019ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு வெளியேறிய மருத்துவ கழிவின் அளவு= 58.27டன்
தற்பொழுது தமிழகத்தில் உள்ள Active corona cases எண்ணிக்கை = 2,88,702 நோயாளிகள்
இந்தியாவில் ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ மருத்துவ கழிவு என்று எடுத்துக்கொண்டால் கூட, இன்று தமிழகத்தில் உற்பத்தியாகி உள்ள கொரோனா மருத்துவ கழிவுகள் மட்டும் =288.7டன் /ஒரு நாள்.
288.7டன் உடன் + சாதாரண நோயாளிகளின் மருத்துவ கழிவுகளும் சேர்த்தால் = சுமார் 340டன் .
இது நம் திறனை விட 6 மடங்கு அதிகமாகும்.
340டன் சுத்திகரிக்க நம்மிடம் வெறும் 55டன் திறனுள்ள பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களே உள்ளன.

இந்த நோய்த்தொற்று காலத்தில் நிலவும் இந்த அசாத்திய சூழலில் மருத்துவ கழிவு மேம்பட்டு பிரச்னையை விரைந்து செயல்பட்டு மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
அரசு செய்ய வேண்டியவை:

  1. வெளிப்படைத்தன்மை: தமிழ்நாட்டில் இருந்து ஒரு நாளைக்கு எவ்வளவு மருத்துவ கழிவுகள் வெளியேறுகின்றன என்பதையும் (Quantified report) அவை எவ்வாறு சுத்திக்கரிக்கப்படுகிறது என்பதனையும் வெள்ளை அறிக்கையாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
  2. பிரச்னையை சரி செய்ய அரசு தரப்பில் இதற்கான நிபுணர்கள் குழு அமைத்து புதிய தீர்வுகளை நடைமுறை படுத்துவதற்கான சாத்தியகூறுகளை ஆராய வேண்டும்.
  3. பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்க கால தாமதம் ஆகும் என்பதால், உடனடியாக மருத்துவ கழிவுகளை கையாள தகுந்த இடங்களை தேர்வு செய்து (மக்களுக்கும் சூழலுக்கும் பாதிப்பில்லாமல் ) அங்கு மாற்று சுத்திகரிப்பு முறைகளை நடைமுறை படுத்த அவசர கால நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
  4. ஒரு வேளை Deep Burial எனும் மருத்துவ கழிவுகளை ஆழ குழி தோண்டி புதைக்கும் திட்டத்தினை அரசு நடைமுறை படுத்துவதாக இருந்தால் அது எந்த வகையிலும் நிலத்தடி நீருக்கும் , நிலத்திற்கும், பாதிப்பில்லாத வகையில் மக்கள் வசிப்பிடம் இல்லாத பகுதிகளில் நடைமுறை படுத்த வேண்டும்.
    (இதற்கு கைவிடப்பட்ட கல் குவாரிகளை தேர்வு செய்யலாம்).
  5. வீடுகளில் இருந்து வெளியேறும் கொரோனா மருத்துவ கழிவுகள் மாநகராட்சி கழிவுகளுடன் கலப்பதை தடுக்க முறையான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். Quarantine வீடுகளின் இருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

6.இனி வரும் காலங்களில் மருத்துவ கழிவு பிரச்னையின் இருந்து தமிழ்நாடு விடுபட, மாவட்டம் தோறும் ஒரு பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் (Common Bio Medical Waste Treatment Facility) அமைக்கப்பட வேண்டும்.

  1. மருத்துவ கழிவுகள் சட்ட விரோதமாக கையாளப்படுவதை தடுக்க மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் வலியுறுத்தியுள்ள Bar code முறை நடைமுறைபடுத்த பட வேண்டும்.
  2. விதி மீறும் சுகாதார நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்களை எடுக்க வேண்டும்.

வீ.பிரபாகரன்,
பூவுலகின் நண்பர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…