இன்று உலக ஜாஸ் தினம் – ‘சுதந்திரம் – அதுதான் இந்த இசையின் அடிநாதம்!

உலகம் இன்று ஜாஸ் தினத்தைக் கொண்டாடுகிறது. ஒடுக்குகிற, ஒதுக்குகிற விதிகளை மீறிக் கிளம்பிய சமத்துவ விடுதலை உணர்வின் வெளிப்பாடு இந்த இசை. இனம், மதம், சாதி என எந்தப் பாகுபாடுமில்லாமல் எல்லாருக்குமானது இந்த ஜாஸ் இசை.
தடைகளை உடைக்கிறது :
ஜாஸ் இசை – ஒருவர்க்கொருவர் புரிதலுக்கும் சகிப்புடைமைக்குமான வாய்ப்புகளை உருவாக்குகிறது. தனிமனிதர்கள், குழுக்கள், சமூகங்களுக்கு இடையேயான பதற்றங்களைத் தணிக்கிறது. கலையார்ந்த புத்தாக்கங்களை, மேம்படுத்தல்களை, வெளிப்பாட்டின் புதிய வடிவங்களை, பாரம்பரிய இசைவடிவங்களை புதிய வடிவங்களுக்குள் கொண்டுவருவதை ஊக்குவிக்கிறது. பண்பாடுகளுக்கிடையே உரையாடலைத் தூண்டுகிறது. ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளையோருக்கு அதிகாரமளிக்கிறது.
“இது வெறும் இசையல்ல. இதுவொரு வாழ்தல் வழி. இதுவொரு இருத்தல் வழி, இதுவொரு சிந்தித்தல் வழி” என்றார் கவிஞரும் பாடகரும் இசையமைப்பாளரும் சமூக உரிமைப் போராளியும் எதிர்ப்பிசையின் சின்னமாகப் பார்க்கப்பட்டவருமான நைனா சைமோன்.
பாகுபாட்டு வரம்புகளும் அடிமைத்தன விதிகளும் இல்லாத இசையைப் பாட்டுப்பாடி, ஆட்டமாடிக் கொண்டாடும் அனைவருக்கும் எஞ்சாமி, எஞ்ஜாயி வாழ்த்துகள்.
-குமரேசன்