திமிங்கலத்தின் வாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய பெண்: அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

கடற்கரையோரம் நடந்து சென்றால் கிளிஞ்சல்கள் கிடைக்கும். ஆனால் தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணை தற்போது கோடீஸ்வரியாக மாற்றியுள்ளது கடற்கரை.

சிரிபான் (49) என்ற பெண் கடற்கரையில் காலார நடந்து சென்றுள்ளார். அப்போது வித்தியாசமான பொருள் ஒன்று கடற்கரையோரம் ஒதுங்கி கிடப்பதை பார்த்துள்ளார். அருகே சென்று பார்த்தவருக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. அது தங்கமோ வெள்ளியோ இல்லை. அதைவிடவும் விலை உயர்ந்த திமிங்கலத்தின் வாந்தி. ஆமாம். திமிங்கலத்தின் வாந்தி அரிய பொருளாக பார்க்கப்படுகிறது.
திமிங்கலத்தின் வாந்தி, அதன் விந்தணுச் சுரப்பில் இருந்து வெளிப்படும் மெழுகு போன்ற பொருளை உள்ளடக்கி உருவாகும். இது, வாசனை திரவியங்களின் முக்கிய பொருளாகும். திமிங்கலத்தின் வாந்தி கலந்து உருவாக்கப்படும் வாசனை திரவியங்கள் விலை உயர்ந்தவை. அப்படிப்பட்ட அரியவகை பொருளான திமிங்கலத்தின் வாந்தியை பெறுவதற்கு முன்னணி வாசனை திரவிய நிறுவனங்கள் காத்துக்கிடக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு அரிய பொருள்தான் கடற்கரையில் சிரிபானுக்கு கிடைத்துள்ளது.
இந்திய மதிப்பில் 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலத்தின் வாந்தியைத் தான் சிரிபான் கண்டெடுத்துள்ளார். தற்போது விற்பனையை எதிர்பார்த்து காத்திருக்கும் சிரிபான், இது தனக்கு அதிர்ஷம் தான். இதன் மூலம் நிறைய பணம் கிடைக்கும். தன் குடும்பத்தின் வாழ்வாதாரமே மாறவுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…