இன்று தெரியும் சூப்பர் மூன்! பிரகாசமாக தெரிவதை கண்டு ரசிக்கலாம்..

இயற்கைக்கு மாறான நிகழ்வு வேறு எதுவுமில்லை என்று கூறும் வகையில் சூப்பர் மூன் என அழைக்கப்படும் பூமிக்கு மிக அருகே நிலவு வர இருப்பதாக நாசா கணித்துள்ளது. குறிப்பாக ஆனி மாதம் பெளர்ணமி வானில் அதிசய நிகழ்வாக, சாதாரண நாட்களை விட நிலவும், வானமும் மிகவும் தெளிவாக காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பார்க்கும் விதமாக இன்றைய தினத்தில் அர்புத நிகழ்வு நடக்கிறது என்றே கூறலாம். இந்த பெரிய நிலவிற்கு ‘பக் சூப்பர் மூன்’ அல்லது, ‘தண்டர் மூன்’ அல்லது ‘ஹே அல்லது ‘மெட் மூன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது நிலவானது வழக்கத்தை விட 17 சதவீதம் அளவில் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும் இருக்கும் என்றும் குறிப்பாக நிலவு பூமியில் இருந்து 3,57,264 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என நாசா கூறியுள்ளது.

இத்தகைய நிகழ்வினை நாளை அதிகாலையில் பார்க்க முடியும் என கூறியுள்ளது. மேலும், 2022ம் ஆண்டில் 3 வது சூப்பர் மூன் ஆகஸ்ட் மாதத்தில் வரும். அதன்பின் 2023 ஜூலை 3ம் தேதி சூப்பர் மூன் வானத்தில் தோன்றும் என நாசா தனது அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.