இரவு, பகல் இனி எல்லாம் ஒன்னு தான்..!! சூரிய உதயம் இல்லாத அண்டார்டிகா..!!
உலகில் ஏழு அல்ல அதிசயங்கள் இருளில் மூழ்கும் அண்டார்டிகா நீ எட்டாவது அதிசயமே… காலங்கள் மாறலாம் என் கடமை மாறாது என்பது அண்டார்டிகாவிற்கு பொருத்தும்.
உலகின் பிற இடங்களில் 4 பருவக் காலங்கள் நிகழ்வது இயற்கையின் அதிசயம். ஆனால், அண்டார்டிகாவில் மட்டும் கோடை காலம், குளிர்காலம் என இரண்டு மட்டுமே உள்ளது.
அண்டார்டிகா பூமியின் மிகவும் குளிரான பகுதியாக உள்ளது. இங்கு வருடத்திற்கு 6 மாதங்கள் சூரிய ஒளி மற்றும் 6 மாதங்கள் இருள் என்பது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் அண்டார்டிகாவில் சூரிய உதயம் இல்லாமல் நீண்ட இரவு கடந்த 13 தேதி அன்று ஆரம்பமானது என ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளன.
இந்த நிகழ்வுக்கு Long Night என பெயரிடப்பட்டுள்ள தாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் இந்த நீண்ட இரவு காலத்தை விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணங்களுக்கு செல்வதற்கு முன் பயிற்சி எடுக்க பயன்படுத்திக் கொள்வது வழக்கமாக வைத்துள்ளனர்.
அண்டார்டிகாவில் உள்ள கன்கார்டியா என்ற பகுதியில், பூமியின் தொலைதூரத் தளத்தை இயக்கும் ஐரோப்பிய விண்வெளி உறுப்பினர்கள் அங்கு பயிற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது .
அந்த வகையில் குளிர்காலப் பயிற்சியாக இந்த ஆண்டும் அண்டார்டிகாவில் ஐரோப்பிய விண்வெளி உறுப்பினர்கள் 12 உறுப்பினர்களை கொண்ட குழு பயிற்சியில் ஈடுபட போகிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.