கொசுக்களுக்கு பிடித்த நிறம் தெரியுமா 

மனித வாடையை முகர்ந்துவிட்டால், கொசுக்கள் அருகே வந்து கடிக்கத் தோதான இடம் பார்க்கும். இது அறிவியல்பூர்வமான உண்மை. மனித மூச்சில் உள்ள கார்பன் – டை – ஆக்சைடு வாடைதான் கொசுக்களுக்கு அழைப்பிதழ். ஆனால், தற்போது வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூடுதல் தகவலையும் கண்டறிந்துள்ளனர்.

அதாவது, மனித மூச்சிலுள்ள கார்பன் – டை – ஆக்சைடின் வாடையை கண்டுகொண்ட பிறகு, அவை சுற்றிலும் நோட்டம் பார்க்கின்றன. அப்போது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் ஏதாவது தட்டுப்படுகிறதா என்பதை தேடுகின்றன. அப்படி தட்டுப்பட்டதும், அதை நெருங்கி தங்கள் ரத்தப் பசியை தீர்க்க முயல்கின்றன.ஆய்வகங்களில் பல நிறங்களில் பொருட்களை வைத்தபோதும், கொசுக்கள் இந்த இரு நிறமுள்ள பொருட்களையே நாடுவதை ஆய்வாளர்கள் கவனித்தனர்.

இது ஏன் என்று ஆராய்ந்தபோது, மனிதர்கள் எந்த நிறத் தோலை உடையவர்களாக இருந்தாலும், அவர்களது தோலிலிருந்து சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஒளி அலைகள் பிரதிபலிக்கின்றன. முதலில் கார்பன் – டை – ஆக்சைடு வாடை அந்த இடத்திலிருந்து வரவேண்டும். அடுத்து அந்த இடம் சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், கொசுக்களுக்கு சாப்பாட்டு மணி அடிக்கப்படுவதாகவே பொருள்.

மற்ற பூச்சிகளுக்கு இதேபோல நிறப் பாகுபாடு பற்றிய அறிவு உண்டா என, விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…