இவர்கள் விண்வெளி வீரர்களா, அமெரிக்கன் ஏவியேஷன் காட்டம்!

இன்றைய காலகட்டத்தில் விண்வெளிக்கு செல்வது என்பது மிக எளிதான காரியமாக மாறிப்போய்விட்டது. அதற்கு காரணம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியே ஆகும்.

முன்பெல்லாம் பயிற்சி அளிக்கப்பட்ட விண்வெளி வீரர்கள்தான் விண்வெளிக்கு சென்று வந்தனர். ஆனால்,தற்போது விண்வெளி செல்வதையே சுற்றுப்பயணமாக மாற்றி வருகின்றனர். மேலும், அவ்வாறு சுற்றுப்பயணமாக விண்வெளி செல்பவர்களை விண்வெளி வீரர்கள் எனவும் அழைத்து வருகின்றனர்.

அண்மையில் அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் விண்வெளிக்கு சுற்றுலா சென்று வெற்றிகரமாக திரும்பினர். மேலும் விண்வெளி சுற்றுலாவுக்கு இவர்களது நிறுவனம் தயாராகி வருகிறது. இதற்கிடையில், விண்வெளிக்கு சுற்றுலா நிமித்தமாக செல்லும் கோடீஸ்வரர்களை விண்வெளிவீரர்கள் என அழைக்கப்படுவது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இதனையடுத்து, பொழுதுபோக்காக விண்வெளி செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என அழைக்கக் கூடாது என்று கூறியுள்ளது அமெரிக்க ஏவியேஷன்.

இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் விண்வெளிக்குச் செல்லலாம். ஆனால், அப்படி செல்பவர்கள் அனைவரும் தங்களை விண்வெளி வீரர்கள் என அழைத்துக் கொள்ள முடியாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. சுற்றுலா பயணிகள் விண்வெளிப் பயணம் மேற்கொண்டாலும் அவர்கள் சுற்றுலா பயணிகள் தான் விண்வெளி வீரர்கள் ஆக முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

இவர்களை விண்வெளி வீரர்கள் என்று அழைப்பதன் மூலமாக எதிர்கால தலைமுறையினருக்கு தொழில்முறை விண்வெளி வீரர்களின் அருமை பெருமைகள் தெரியாமல் போய்விடும். ஆகவே ஜெஃப் பெசோஸ், ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட தொழிலதிபர்களை விண்வெளி வீரர்கள் என்று அழைக்கக்கூடாது என்று அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *