கெத்து காட்டிய பெர்சவரன்ஸ் ரோவர்
நாசாவின் விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ரோவர் செவ்வாய் கிரகத்தில் முதல்முறையாக கால் பதித்து சுழன்று சுழன்று நகர்ந்து சென்றுள்ளது. சிவப்பு கிரகமான செவ்வாயின் மேற்பரப்பில் ரோவர் எடுத்த படத்தை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 19-ல் வரலாற்று நிகழ்வாக நாசாவின் பெர்சவரன்ஸ் (Perseverance) ரோவர் பூமியில் இருந்து ஏழு மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக சென்றது. 3 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ரோவர், 222.45 மில்லியன் கி.மீ. பயணம் செய்து செவ்வாய் கிரகத்தில் தனது முதல் இயக்கத்தை நிகழ்த்தி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் ரோவர் கால் பதித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் நாசா வெளியிட்டுள்ளது.
ஆறு சக்கரத்துடன் கார் அளவிலான இந்த ரோவர் கருவி வானியலியலை துல்லியமாக ஆய்வு செய்யக்கூடியது. இது செவ்வாயில் அற்புதமாக கால் பதிக்கும் வீடியோ காட்சி காண்போரை அதிசயக்க வைத்துள்ளது.