விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு செய்த தேமுதிக தொண்டர்கள்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்  உடல்நலம் பெற வேண்டி கும்பகோணம் அரைக்காசு அம்மாள் தர்காவில் இன்றிரவு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கல்.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சமீப நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 விரைவில் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக விஜயகாந்த் ரசிகர்கள் இன்று இரவு கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள அரைக்காசு அம்மாள் தர்காவில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

 அதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் மற்றும் தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.

திருவாரூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி பழனியாண்டவர் கோவிலில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தி வழிபாடு.

 தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியை சேர்ந்தவர்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக  திருவாரூர் கீழவீதியில் உள்ள பழனியாண்டவர் திருக்கோவிலில் தேமுதிக நகர செயலாளர் சதீஷ் தலைமையில் மகா சத்ரு சம்ஹார யாகம் வளர்த்து சிறப்பு வழிபாடு செய்தனர் இதனை தொடர்ந்து நேரடி விநாயகர் ஆலயத்தில் 201 சிதறு தேங்காய் உடைத்து விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி வழிப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அருள் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் ஏறாளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *