முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு
எம்.ஆர்.விஜயபாஸ்கர் 55 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது ஜிபிஎஸ் கருவி ஒளிபிரதிபளிப்பான் குறிப்பிட்ட நிறுவனத்தில் தான் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி எம்.ஆர்.விஜயபாஸ்கர் 1500 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் வெளிப்படையாகவே புகார் தெரிவித்து இருந்தும் அவருக்கு ஏன் ஆளுநர் அனுமதி தர மறுக்கிறார்.
அதனால்தான் அண்ணாமலைக்கும் எம் ஆர் விஜயபாஸ்கருக்கும் டீலிங் உள்ளது. லூலு மால் விவகாரத்தில் தலையிட்டு பேசிய அண்ணாமலை பின்னர் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு அதில் எவ்வாறு அமைதி காத்தாரோ அதுபோலத்தான் எம் ஆர் விஜயபாஸ்கர் விவகாரத்திலும் அண்ணாமலை இருக்கிறார் அவர் எம் ஆர் விஜயபாஸ்கரிடமிருந்து என்ன பயன் அடைந்தார் என்பதை கேட்டு சொல்ல வேண்டும்… கரூர் எம்பி ஜோதிமணி பேட்டி