ரஜினிகாந்த் கிரிக்கெட் பார்த்ததில் அரசியல் இல்லை – டிடிவி தினகரன் 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நயினார்கோவில் ஒன்றிய வடக்கு செயலாளர் ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில். மழை பாதித்த பகுதிகளில் முதல்வர் சென்று பார்வையிட்டதோடு இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜெய்ஷாவுடன் அமர்ந்து ரஜினிகாந்த்  கிரிக்கெட் பார்த்துள்ளதன் அரசியல் பின்னணி குறித்த கேள்விக்கு:

கிரிக்கெட் போட்டியில் அனைவரும் கலந்து கொள்வார்கள். இதில் அரசியல் பின்னணி இருப்பதாக தெரியவில்லை. இதுகுறித்து நண்பர் ரஜினிகாந்த்திடம் தான் கேட்க வேண்டும்.

அதிமுக சின்னம், கொடி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடைக்கு ஓ‌. பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார் என்ற கேள்விக்கு:

ஓ‌. பன்னீர்செல்வம் சட்டப்படி போராடிக் கொண்டிருக்கிறார். நீதிமன்றம் என்ன தீர்ப்பு தருகிறது என்பதை பார்ப்போம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *