மாநிலம் மட்டும் போதும், மத்தியில் வேண்டாம்; எஸ்கேப் ஆன ஈபிஎஸ்…! 

40 தொகுதிகளிலும் அதிமுகவின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் பேச்சு.

தென்காசி வடக்கு மாவட்டம் சார்பில் சங்கரன்கோவிலில் அதிமுகவின் 52 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற பொது  கூட்டத்தில்  கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி  பேசினார்.

ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற ஏற்றம் பெற திட்டங்களை கொண்டு வந்த கட்சி அதிமுக என்றும், தற்போத ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையிலும் மக்களுக்கு என்ன செய்தார்கள் ஒரு துரும்பை கூட கிள்ளி போட வில்லை. எல்லா திட்டங்களும் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் தான்.  என தமிழக அரசை விமர்சித்து பேசிய அவர்..

அதிமுக பாஜகவில் இருந்து பிரிந்து விட்டது என நாங்கள் கூறுகிறோம். பி team  என முதல்வர் சொல்கிறார் அவர் ஏன் இதை பற்றி கவலை கொள்கிறார். எங்களை கண்டு அஞ்சுகிறார் முதல்வர். தேசியக் கட்சிகள் தமிழகத்தை பற்றி கவலைப்படுவதில்லை.

யாருக்கும் நாங்கள் அஞ்சு ஏதுமில்லை அஞ்சப்போவதும் இல்லை அதிமுக தலைமையில் கூட்டணி 40 அமைத்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.  மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என அதிமுக நினைக்கவில்லை தமிழக மக்கள் தான் எங்கள் எஜமானர்கள். அவர்களுக்கு தேவையானதை பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கு தயாராக உள்ளோம்.

பாண்டிச்சேரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் 2026 இல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே தற்போது மகளிர் உரிமைத்தொகை ஒரு சில பேருக்காக வழங்கப்ட்டு வருகிறது. அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு வரும் பாராளுமன்ற தேர்தல் முன்னோட்டமாக இருக்க வேண்டும். எனவும் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *