தீவரமாகும் கொடநாடு கொலை வழக்கு; ஜெயலலிதா ஓட்டுநரிடம் மீண்டும் விசாரணை.

சி.பி.சி.ஐ.டி. போலிசார் முன் கொடநாடு வழக்கு விசாரணைக்கு ஆஜரான ஜெயலலிதா ஆஸ்தான ஓட்டுநர் ஐயப்பன், வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தும் சி.பி.சி.ஐ.டி. போலிசார், 

தமிழ்நாட்டில் நடந்த கொலை கொள்ளை சம்பவங்களில் பரபரப்பு ஏற்படுத்திய கோடநாடு கொலை கொள்ளை சம்பவத்தின் விசாரணை சி பி சி ஐ டி போலீசாரால் தீவிர படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா முன்னாள் ஓட்டுநர் கனகராஜன் சகோதரர் தனபாலிடம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. 

தற்போது கோவை பிஆர்எஸ் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஓட்டுநர் ஐயப்பனிடம் தற்பொழுது பி ஆர் எஸ் மைதானத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா மறையும் வரை அவரின் ஆஸ்தான ஓட்டுநராக இருந்தவர் திருநெல்வேலி பூர்விகா கொண்ட ஐயப்பன். சி பி சி டி போலீசாரின் அழைப்பானக்கு இணங்க ஐயப்பன் இன்று காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். 

முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , ஜெயலலிதாவிடம் 1991 முதல் ஓட்டுனராக இருந்து வந்ததாகவும், 2021 வரை பணியில் இருந்ததாகவும் தெரிவித்தார். கனகராஜ் 2000 க்கு பின்பு தான் வேலைக்கு வந்ததாகவும்,அவர் பழக்க வழக்கம் சரிநில்லை  என்பதால் நீக்கி விட்டனர் எனவும் தெரிவத்தார். கோடநாட்டில் இது போன்ற சம்பவம் நடைபெறும் என எதிர்பார்க்க வில்லை என கூறிய அவர், சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி  விசாரணைக்கு கூப்பிட்டு இருக்கின்றனர் எனவும், 

ஏற்கனவே உதகையில் நடந்த விசாரணையில் ஆஜராகி இருப்பதாகவும், இரண்டாவது முறையாக இங்கு சிபிசிஐடி விசாரணைக்கு வந்து இருப்பதாகவும் தெரிவித்தார். கனகராஜின் அண்ணன் தனபால் குறித்து எதுவும்  தெரியாது எனவும், இப்போது என்ன விசாரணை என தெரியாது எனவும்  கடந்த முறை கனகராஜ் குறித்து விசாரணை மேற்கொண்டனர் எனவும் தெரிவித்தார்.

எனக்கு அரசியல்  தொடர்பாக எதுவும் தெரியாது என தெரிவித்த அவர், தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவின் ஒட்டுனர் எனவும் கோடநாட்டில் அவர் வரும்போதெல்லாம் அங்கு இருந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 300-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *