அயலக தமிழர்களுக்காக முதலில் குரல் கொடுப்பவர் நம் முதல்வர்தான்

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு என்ன இன்னல்கள் ஏற்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

இஸ்ரேலில் உள்ள தமிழர்களை பாதுகாப்பாக கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது. ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலிருந்து இந்தியா திரும்பிய முதல் விமானத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த 21 பேர் திரும்பி இருந்தனர், இன்று மதியம் மேலும் 25க்கும் மேற்பட்டோர் வர வாய்ப்பு உள்ளது.

என அமைச்சர் செஞ்சி மஸ்தான் காஞ்சிபுரத்தில் பேட்டி. தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக உள்ள கே எஸ் செஞ்சி மஸ்தான், கொரோனா  கால கட்டத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் அவரது தீவிர ஆதரவாளரான  செஞ்சி சரவணன் என்பவர் கொரோனா நோய் தொற்றிலிருந்து செஞ்சி மஸ்தான் விடுபட்டு பூரண நலம் பெற வேண்டும் என உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் பெருமாள் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வேண்டிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் மருத்துவமனையில் சிகிச்சை முடித்து பூரண நலத்துடன் எடுத்து திரும்பினார்.

இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது ஆதரவாளரின்  வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக புரட்டாசி மாதம் சனிக்கிழமையான இன்று காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தனது ஆதரவாளருடன் நேரில் வந்து வரதராஜ பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் மலர் மாலைகள், தேங்காய் பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்கி அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தி வேண்டுதலை நிறைவேற்றினார்.

பின்னர் கோவில் வளாகத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். இஸ்லாமியரான அமைச்சர் செந்தில் மஸ்தான் சமய நல்லிணக்கத்தோடு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேரில் வந்து பக்தரின் வேண்டுதலை நிறைவேற்றிய செய்தியை அறிந்து அனைத்து தரப்பு மக்களும் அமைச்சரை வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.

சுவாமி தரிசனத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு என்ன இன்னல்கள் ஏற்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின். இஸ்ரேலில் உள்ள தமிழர்களை பாதுகாப்பாக கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.

ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலிருந்து இந்தியா திரும்பிய முதல் விமானத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த 21 பேர் திரும்பி இருந்தனர், இன்று மதியம் மேலும் 25க்கும் மேற்பட்டோர் வர வாய்ப்பு உள்ளது. என அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *