ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து போஸ்டர் வெளியிட்ட பாஜகவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து சமூக வலைதளங்களில் போஸ்டர் வெளியிட்ட பாஜகவை கண்டித்து தேனியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ராவணனாக சித்தரித்து சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் பாஜகவினர் போஸ்டர் வெளியிட்டனர்.‌ அதற்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தேனியில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து. 

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதில் ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து போஸ்டர் வெளியிட்ட  பாஜகவினரை கைது செய்யக்கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  முன்னதாக பிரதமர் மோடி மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் பாஜகவினரை கண்டித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *