2024 தேர்தலை விட்டால் நாடாளுமன்றம் பொம்மையாகிவிடும் – எம்.பி. திருச்சி சிவா கவலை

இந்த தேர்தல் மிக முக்கியமானது இந்த முறை ஏமாந்து விட்டால் நாடாளுமன்றம் பொம்மையாகிவிடும். அதிகாரம் ஒருவர் கையிலே சென்று விடும். அவர்கள் நினைப்பதுதான் சட்டம் ஆகும் பூம்புகாரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேச்சு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக கலை இலக்கிய அணி சார்பாக கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, தலைமை கொறடா கோவி.செழியன் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். 

விழாவை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானது ஒவ்வொருவரின் வாக்கும் இன்றியமையாதது இந்த முறை நாம் ஏமாந்து விட்டால் நாடாளுமன்றம் பொம்மையாகிவிடும் அதிகாரம் அனைத்தும் ஒருவர் கையிலே சென்று விடும் அவர்கள் நினைப்பதுதான் சட்டமாகும் அதனை நாம் மீற முடியாது அதனை மீறுபவர்களை எப்படி தண்டிக்க வேண்டும் என்பதற்காகவும் சட்டங்களை இயற்றி வைத்துள்ளார்கள் 

இப்படி பெரிய பலத்துடன் இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் எனவே இந்த கூட்டணி வெற்றி பெற்ற ஆக வேண்டும் இவர்கள் ஆட்சியில் இருந்து இறங்க வேண்டும் அப்போதுதான் இந்தியாவின் தனித்தன்மை பாதுகாக்கப்படும் அண்ணல் அம்பேத்கர் எழுதிய சட்டத்தில் 128 முறை திருத்தங்களை செய்திருக்கிறார்கள் 

புதுமைப்படுத்தி இருக்கிறார்கள் அதன் வாழ்வும் மக்களின் ஒற்றுமையும் பாதுகாக்கப்பட வேண்டும் 10 ஆண்டுகள் இவர்களது ஆட்சியில் நாடு நலிந்துள்ளது ஜனநாயகம் சிதைந்துள்ளது கூட்டாட்சி தத்துவம் மெல்ல மெல்ல பொடிப்பொடியாாகி வருகிறது இந்த நிலை மாற வேண்டும் என்று சொன்னால் நம்முடைய உழைப்பும்  கடமையும் மிக முக்கியமானது என சிவா பேசினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *