பாஜக கூட்டணி குறித்து ஈபிஎஸ்தான் முடிவெடுப்பார்; ஆர்.பி.உதயக்குமார் விளக்கம்

நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமர் என மக்கள் தீர்மானித்துள்ளனர் என்றும் – பாஜக கூட்டணி குறித்து எங்கள் பொதுச் செயலாளர் ஈபிஎஸ் அறிவிப்பார் – என உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்., நீட் தேர்வை ரத்து செய்யவும், அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் என்பதற்கு கையெழுத்து போட பேனா உசிலம்பட்டியில் இருந்து அனுப்பி வைக்கிறோம் கையெழுத்து போடுங்கள்., ஆனால் உதயநிதி என்ன சொல்கிறார் என்றால் ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் கையெழுத்து போடுகிறாராம், கடல் வற்றிய பின் மீனை சாப்பிட காத்திருக்குமாம் கொக்கு என்பதை போல, கடைசியில் காத்திருந்த கொக்கு வயிறு வற்றி செத்துவிடும் என்ற கதையாக உள்ளது உதயநிதியின் பேச்சு எனவும்., 

பாரத பிரதமர் நரேந்திர மோடி என்று இந்த நாட்டு மக்கள் தீர்மானம் செய்திருக்கிறார்கள்., ஆகவே இங்கு ராகுல் காந்தி பிரதமராக வந்த பின் நீட் தேர்வை ரத்து செய்வார்களாம் என சொல்கிறார்கள் என பேசினார்.,

மேலும் பல்வேறு மாவட்டங்களில் எங்களுக்கு கிடைக்கவில்லை மகளீர் உரிமைத் தொகை திட்டம் என மகளீர் சொல்கிறார்கள், இந்த நாட்டில் யார் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கான பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் என பெயர் வைத்து இருக்கலாம் எனவும்., 

ஏனென்றால் சொத்து இருந்தா தரமாட்டோம், நகை இருந்தா தரமாட்டோம், எது இருந்தாலும் தர மாட்டோம் என சொல்கிறார்கள், எங்களது கோரிக்கை 2 கோடியே 18 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும், சாமானியர்களுக்கும் கொடுக்கவில்லை என்றால் போராடுவோம், இல்லையெனில் இபிஎஸ் முதல்வராக வருவார் எல்லோருக்கும் தருவார் என பேசினார்.,

தொடர்ந்து பாஜக கூட்டணி குறித்து ஜெயக்குமார் பேசியதும், இன்று நரேந்திர மோடி தான் பிரதமராக வருவார் என பேசியதால் பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதலில் மலுப்பலான பதில் அளித்த ஆர்.பி.உதயக்குமார்., பாஜக கூட்டணி குறித்து எங்கள் பொதுச் செயலாளர் அறிவிப்பார் என பேட்டியளித்தார்.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *