ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பேர் விபத்தில் பலி; அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று அஞ்சலி

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஓனான் குட்டை கிராமத்தை சேர்ந்த 7 பேர் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அமைச்சர் துரை முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி முதலமைச்சர் அறிவித்த ஒரு லட்சம் நீ வரணும் உதவி காசோலைகளை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார்.

வேலூர் மாவட்டம் பேர்ணம்பட்டு அடுத்த ஓனான் குட்டை கிராமத்தை சேர்ந்த 7 பெண்கள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

 ஓனான் குட்டை கிராமத்திற்கு தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் ரட்சகன்,அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன். ஆகியோர் சென்று உயிரிழந்தோ குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி 7 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. ஒரு லட்சத்திற்கான நிவாரண உதவி காசோலையை வழங்கினார்கள்.

மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் காசோலையும் வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த விபத்து துரதிஷ்டவசமானது ஆழ்ந்த இரங்கலை இறந்தவர்களுக்கு தெரிவித்துகொள்கிறேன்.

இனி இது போன்ற விபத்துகள் நடக்க கூடாது அவர்களின் குடும்பங்களில் உள்ள ஒரு நபருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம் இங்கு தாயை இழந்த ஒரு குழந்தைக்கு மேல்படிப்பிற்கான வசதிகளை அரசு சார்பில் செய்து தரப்படும் என கூறினார்.

முன்னதாக காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்தது. இதில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெகத்ரட்சகன் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார்,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், துணை மேயர் சுனில் குமார் மற்றும் திரளான திமுகவினர் கலந்துகொண்டனர். இதில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குசாவடி முகவர்களும் எவ்வாறு பணியாற்ற வேண்டுமென விளக்கி கூறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *