ஆளுநரே திரும்பி போ..! ஆர்.எஸ்.எஸ்.ரவியே திரும்ப போ..! கோவையில் கருப்புக்கொடி போராட்டம்

பெரியாரிய, அம்பேத்காரிய, மார்க்சிய அமைப்பினர் ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக கண்டன முழக்கம் … தமிழ்நாட்டின் நல பணிகளுக்கு அரசாங்க திட்டங்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் .

தமிழ்நாடு மக்களின் நல்ல சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆளுநர் முட்டுக்கட்டையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பாஜக ஒன்றிய அரசாங்கத்தில் அமர்ந்த காலகட்டம் முதல் கடந்த பத்தாண்டு காலமாக தொடர்ந்து ஆளுநர்களை வைத்து அரசியல் செய்து வருகின்றது. 

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வைத்து அரசியல் நடந்த நிலையில், தற்பொழுது ஆரின் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டு பாஜக அரசியல் செய்து வருகின்றது. இதனை பெரியாரிய, அம்பேத்காரிய, மார்க்சிய உணர்வாளர்கள் கடுமையாக எதிர்த்து ஆளுநரை கண்டித்து முழங்கி வருகின்றனர். இந்த நிலையிலே கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் கவர்னர் ஆர். என். ரவியை கண்டித்து முற்போக்கு அமைப்புகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

பாரதியார் பல்கலைக்கழகம் செல்லும் வடவள்ளி சாலை பகுதியில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத்தை, தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆளுநர் ரவியே , ஆர் எஸ் எஸ் ரவியே திரும்பி போ என்ற முழக்கத்தை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர் . 

சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு ரத்துக்கு ஒப்புதல் தராதது, தமிழ்நாடு தேர்வாணைய குழு தலைவர் பொறுப்புக்கு தமிழ்நாடு அரசாங்கம் பரிந்துரைத்தவர்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாதது, தமிழ்நாடு மாணவர்கள் இடையே சனாதனத்தை திணிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை என்ற போதனைக்கு எதிராக தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளையும் பிளவுபடுத்தும் கருத்துக்களை முன் வைப்பதும், 

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விவகாரத்தில் பொதுமக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்காமல் இருப்பது, தமிழ்நாட்டின் பாட நூல் திட்டங்களுக்கு எதிராக புதிய கல்வி கொள்கைகளை திணிப்பது என பல்வேறு விடயங்களில் ஆளுநரின் போக்கு தமிழ்நாட்டுக்கு எதிரானதாக அமகுற்றச்சாட்டு, பெரியாரிய, அம்பேத்காரிய, மார்க்சிய  கருப்புக் கொடி போராட்டக்காரர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன. 

ஆளுநர் என்பவர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மக்கள் நல பணிகளை அமல்படுத்த பணியாற்ற வேண்டுமே தவிர அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்பது போராட்டக்காரர்கள் முன்வைத்த பொதுவான கோரிக்கையாக இருக்கின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *