‘எடப்பாடி நடத்தியது டெண்டர்கள் மாநாடு’; எம்ஜிஆர் சிலையில் எழுதிய வாசகத்தால் பரபரப்பு

எம்ஜிஆர் நடத்தியது தொண்டர்கள் மாநாடு, எடப்பாடி நடத்தியது டெண்டர்கள் மாநாடு என்ற வாசகங்களை  கைப்பட அட்டையில் எழுதி ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலையின் அடியில்  எம்ஜிஆர் படத்துடன் எம்ஜிஆர்  விசுவாசிகள் என்ற பெயரில் தொங்க விடப்பட்டுள்ள அட்டை ஆண்டிபட்டியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டியில் பரபரப்பான மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில்  வைகைஅணை சாலைப்பிரிவு உள்ளது ஆண்டிபட்டி நாரின் முக்கிய சாலை சந்திப்பாகவும் ,  அதிமுக கட்சியினரின்  முக்கிய அடையாளமாகவும் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட  எம்ஜிஆர் சிலை உள்ளது

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  நடத்திய மாநாடு கடந்த 20ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது

மாநாட்டிற்கு முன்பாகவே பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கண்டன குரல்களும் சுவரொட்டிகளும்

பரவலாக தேனி மற்றும் மதுரை உள்ளிட்ட  பல்வேறு மாவட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டன மதுரை மாநாட்டில் அதிமுக உண்மை தொண்டர்கள் யாரும் இடம் பெறவில்லை , 

 பலகோடி ரூபாய் செலவில் அழைத்து வரைபட்ட கூட்டம் என மதுரை மாநாடு குறித்து  முன்னாள் முதல்வர் ஓ .  பன்னீர்செல்வம்  மற்றும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் 

விமர்சிக்கப்பட்ட இந்த மாநாடு நடந்து முடிந்த பரபரப்பு அடங்குவதற்குள் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரின் மையப் பகுதியான வைகைச்சாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலையின் அடிப்பகுதியில் எம்ஜிஆர் விசுவாசிகள் என்ற பெயரில்

எம்ஜிஆர் நடத்தியது தொண்டர்கள் மாநாடு எடப்பாடி நடத்தியது டெண்டர்கள் மாநாடு என்ற வாசகங்கள் அடங்கிய அட்டை தொங்க விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *