இது வெற்று விளம்பர மாநாடு; அதிமுகவை தாக்கிய டிடிவி

ஆட்களை பணம் கொடுத்து கூட்டி வந்து மாநாடு நடத்துகிறார்கள் யாருக்கும் எந்த பயனும் இல்லை இது வெற்று விளம்பரம் பல கோடி செலவு – ரூ 300 400 கோடி கூட செலவாகி இருக்கும் – TTV தினகரன் பேட்டி 

சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது ஒரு கட்சி ஆடம்பரமாக மாநாடு நடத்துவது குறித்து மக்களுக்கு எந்த பயனும் இல்லை ஆட்களை பணம் கொடுத்து கூட்டி வந்து மாநாடு நடத்துகிறார்கள் யாருக்கும் எந்த பயனும் இல்லை இது வெற்று விளம்பரம் பல கோடி ரூ 300 400 கோடி கூட செலவாகி இருக்கும் என்கிறார்கள் ஆட்களை திரட்ட பார்க்கிறார்கள் வண்டி தான் வருமே தவிர ஆட்கள் வரப் போவதில்லை என்றார் 

நீட் தேர்வு குறித்து திமுக உண்ணாவிரதம் குறித்து கூறுகையில் அவர்களும் ஏமாற்றுகிறார்கள் என்றார் ஏற்கனவே எடப்பாடி தலைமையிலான அரசு ஊழல் நிறைந்ததால் மக்கள் நம்பிக்கை இழந்த ஆட்சி நடந்தது  திமுக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள் ஆனால் அவர்களும் பழனிச்சாமிக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் ஆட்சி செய்கிறார்கள் இருவரும் ஒரே குணமாக இருக்கிறார்கள் இதுக்கு மாற்று கட்சியாக வருங்காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மக்கள் உறுதியாக தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார் 

பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பீர்கள் என்று கேட்டதற்கு பொருத்திருந்து பாருங்கள் நாளு ஐந்துநாட்களுக்குள் முடிவெடுப்போம் என்றார். யோகி ஆதித்தநாத் காலில் ரஜினி விழுந்தது குறித்து கருத்து தெரிவிக்கையில் யோகி ஒரு துறவி என்பதால் விழுந்திருப்பார் துறவியிடம் ஆசிர்வாதம்  வாங்குவதற்கு வயது வித்தியாசம் இல்லை முற்றும் துறந்தவர் பாதத்தில் ஆசிர்வாதம் பெற்றிருப்பார் யோகியை துறவியாக ரஜினி பார்த்திருப்பார் என்றார். 

பாஜக ஊழல் இல்லாத ஆட்சி புரிந்ததாக அண்ணாமலை கூறுவது குறித்து கேட்ட போது ஊழல் இருக்கா இல்லையா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் வரும் தேர்தலில் மக்கள் தான் முடிவு செய்வார்கள் ஊழல் இருக்கிறதா அதன்உண்மை காலப்போக்கில் தெரியவரும் மதுரையில் மாநாடு நடத்துவதற்கு நோக்கம் குறித்து கூறுகையில் 

மதுரை நீதி வழங்கிய பூமி அநீதியை அழித்த  பூமி அநீதி அழிக்கப் போவதை அவர்களே ஒற்றுக்கொள்கிறார்கள் என்றார் கூட்டணி பற்றி பொறுமையாக இருங்கள் என்றார். ரஜினிகாந்த் இமயமலை போய் வரும்வழியில் உபி முதல்வரைப சந்தித்துள்ளார் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *